Asianet News TamilAsianet News Tamil

IIMCAA-ன் முன்னாள் மாணவர் சங்கத்தின் UP பிரிவுக்கு புதிய செயற்குழு… 2 டஜன் நகரங்களில் கூட்டங்கள் ஏற்பாடு!!

ஐஐஎம்சி முன்னாள் மாணவர் சங்கத்தின் உத்தரப்பிரதேச பிரிவுக்கு புதிய செயற்குழு கிடைத்துள்ளதோடு, இந்த சங்கம் ஒவ்வொரு ஆண்டும் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் உள்ள இரண்டு டஜன் நகரங்களில் இணைப்பு கூட்டங்களை ஏற்பாடு செய்கிறது. 

iimc alumni association gets new executive committee and organizes meetings in two dozen cities
Author
India, First Published May 16, 2022, 9:24 PM IST

ஐஐஎம்சி முன்னாள் மாணவர் சங்கத்தின் உத்தரப்பிரதேச பிரிவுக்கு புதிய செயற்குழு கிடைத்துள்ளதோடு, இந்த சங்கம் ஒவ்வொரு ஆண்டும் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் உள்ள இரண்டு டஜன் நகரங்களில் இணைப்பு கூட்டங்களை ஏற்பாடு செய்கிறது. இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மாஸ் கம்யூனிகேஷனின் உத்தரபிரதேச பிரிவின் ஆண்டு கூட்டமான Koo Connections என்னும் முன்னாள் மாணவர் சங்கம் சந்திப்பு நிகழ்ச்சி லக்னோவில் நடைபெற்றது. முன்னாள் மாணவர் சங்க தலைவர் சந்தோஷ் வால்மீகி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், பிரபல பாடலாசிரியர் மற்றும் கதையாசிரியர் நிலேஷ் மிஸ்ரா, பொதுச் செயலாளர் பங்கஜ் ஜா, அமைப்பு செயலாளர் மனேந்திர மிஸ்ரா, ஜிஎஸ்டி அதிகாரி நிஷாந்த் தருண், டாக்டர் உபேந்திர குமார் மற்றும் அர்ச்சனா சிங் ஆகியோர் கலந்துக்கொண்டு பேசினர். இந்த சங்கம் ஒவ்வொரு ஆண்டும் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் உள்ள இரண்டு டஜன் நகரங்களில் இந்த வகையான இணைப்பு (connection)  கூட்டங்களை ஏற்பாடு செய்கிறது. பிப்ரவரி 27 ஆம் தேதி டெல்லியில் தொடங்கிய இந்த திட்டத்தின் முதல் கட்டம் மே 28 ஆம் தேதி வங்காளதேச தலைநகர் டாக்காவில் நிறைவடைகிறது.

iimc alumni association gets new executive committee and organizes meetings in two dozen cities

இதனை முன்னிட்டு உத்தரபிரதேச பிரிவு புதிய செயற்குழு உருவாக்கப்பட்டது. அதன் தலைவராக மனேந்திர மிஸ்ரா, துணைத் தலைவராக ரஞ்சித் சின்ஹா, ராகவேந்திர சைனி, ராசி லால், பொதுச் செயலாளராக பஞ்சனன் மிஸ்ரா, செயலாளர்களாக மனோமஹன் சிங், அர்ச்சனா சிங், இம்தியாஸ், பொருளாளராக பிரபாத் குமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் தவிர, அருண் வர்மா அமைப்பு செயலாளராகவும், பிரம்மானந்த், ராகவேந்திர சுக்லா, ஆர்ய பாரத், ரவி குப்தா, பிரனேஷ் திவாரி, அமித் யாதவ், மணீஷ் சுக்லா, அமித் கனோஜியா, பாஸ்கர் சிங், ஸ்வேதா ராஜ்வன்ஷி மற்றும் விஜய் ஜெய்ஸ்வால் ஆகியோர் நிர்வாக உறுப்பினர்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய  IIMCAA-இன் நிறுவன உறுப்பினர் ரித்தேஷ் வர்மா, IFFCO IIMCAA விருது, IIMCAA உதவித்தொகை, மருத்துவ உதவி நிதி, IIMCAA கேர் டிரஸ்ட் மற்றும் IIMCAA குழு காப்பீட்டுத் திட்டங்கள் போன்ற IIMCAA திட்டங்கள் பற்றிய விவரங்களைத் தெரிவித்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios