அசாம் மாநிலத்தில் தொடர் போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் பிரதமர் மோடி ஆசாமுக்கு வருகை தந்தால் மிகப்பெரிய போராட்டம் வெடிக்குமென அசாம் மாணவர் சங்கங்கள் அறிவித்துள்ளன.  புதிய குடியுரிமை சட்டம், மற்றும் தேசிய குடியுரிமை பதிவேடு உள்ளிட்ட சட்டங்களை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன.

இந்நிலையில்  வடகிழக்கு மாகாணங்களில் இந்த சட்டத்தை எதிர்த்து  ஆங்காங்கே போராட்டங்களில்  கலவரங்களும் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.  இந்நிலையில்  கேலோ இந்தியா விளையாட்டு போட்டி அசாம் தலைநகர் கவுகாத்தியில் ஜனவரி 10 ஆம்  தேதி தொடங்கி 22ஆம் தேதி வரை நடக்க உள்ளது, இந்த போட்டியை  பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார்.  இந்நிலையில் கேலோ இந்தியா போட்டியை தொடங்கிவைக்க வரும் பிரதமரை எதிர்த்து தற்போதே போராட்டங்கள் தீவிரம் அடைந்துள்ளன.

இந்நிலையில்  இப்போராட்டங்களையும் மீறி  பிரதமர் ஆசாம் வரும்பட்சத்தில்  மிகப்பெரிய போராட்டம் கலவரமாக வெடிக்கும் என்று  ஆசாம்  மாணவர் சங்கங்கள் அறிவித்துள்ளன,  ஏற்கனவே குடியுரிமை சட்டத்தை எதிர்த்து போராட்டங்கள் தீவிரமாக்கி மத்திய அரசுக்கு எதிராக மக்கள் கொந்தளித்து வரும் நிலையில் பிரதமருக்கு அம்மாநில மாணவர்கள் எச்சரித்துள்ளது குறிப்பிடதக்கது.