140 கோடி மக்களும் ஒரு உறுதிமொழி எடுத்தால், 2047க்குள் இந்தியா வளர்ச்சி அடைந்துவிடும் : பிரதமர் மோடி

140 கோடி நாட்டு மக்களும் நாட்டை வளர்ச்சியடையச் செய்ய உறுதி எடுத்தால், 2047ஆம் ஆண்டுக்குள் இந்தியா ‘வளர்ச்சியடைந்த நாடாக மாறிவிடும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

If 140 crore citizen take a resolve India will become developed nation by 2024 Pm modi in Varanasi Rya

பிரதமர் நரேந்திர மோடி தனது சொந்த தொகுதியான வாரணாசிக்கு இன்று பயணம் மேற்கொண்டார். 2 நாள் பயணமாக உத்தரப் பிரதேசத்தின் பார்கி கிராமத்தில் நடந்த விக்சித் பாரத் சங்கல்ப் ( Viksit Bharat Sankalp Yatra) நிகழ்ச்சியில் பங்கேற்றார்.  வாரணாசியில் உள்ள கட்டிங் மெமோரியல் இன்டர் கல்லூரியில் நடைபெறும் விக்சித் பாரத் சங்கல்ப் யாத்ரா கண்காட்சியில் பிரதமர் நரேந்திர மோடி, உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பின்னர் இந்த திட்டத்தின் பயனாளிகளுடன் உரையாடிய அவர், “140 கோடி நாட்டு மக்களும் நாட்டை வளர்ச்சியடையச் செய்ய உறுதி எடுத்தால், 2047ஆம் ஆண்டுக்குள் இந்தியா ‘வளர்ச்சியடைந்த நாடாக மாறிவிடும்” என்றார். சுதந்திரப் போராட்டத்தின் போது நிலவிய "சுதந்திரக் காய்ச்சலை" போன்று மக்கள் வளர்ச்சிக்கான "எழுச்சியை " ஊக்குவிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் பிரதமர் மோடி பேசினார்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

தொடர்ந்து பேசிய அவர் “இந்த விகாஸ் பாரத் சங்கல்ப் யாத்திரையை வெற்றியடையச் செய்ய அரசு, அரசியல் மற்றும் சமூகப் பணிகளுடன் தொடர்புடைய நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் நேரத்தைச் செலவிடுகிறார்கள். எனவே வாரணாசி எம்பி என்ற முறையில் எனக்கும் இந்த நிகழ்ச்சிக்கு நேரம் கொடுக்க வேண்டிய பொறுப்பு உள்ளது” என்று கூறினார்.

மேலும் “ விக்சித் பாரத் சங்கல்ப் யாத்ரா எனது தேர்வு. நான் வாக்குறுதி அளித்தது நிறைவேற்றப்பட்டதா இல்லையா என்பதை உங்களிடமிருந்து நான் அறிய விரும்புகிறேன், மக்களுக்கு வீடுகள் கிடைத்தன, ”என்று மோடி கூறினார்.

இடை தொடர்ந்து நமோ காட் பகுதியில் காசி தமிழ் சங்கமம் இரண்டாம் பதிப்பை தொடங்கி வைக்கும் மோடி, கன்னியாகுமரி மற்றும் வாரணாசி இடையே இயக்கப்படும் காசி தமிழ் சங்கமம் எக்ஸ்பிரஸ் ரயிலை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

காசி தமிழ் சங்கமம், டிசம்பர் 17 முதல் 31 வரை நடைபெற உள்ளது, இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து 1,400 பிரமுகர்கள் பங்கேற்க உள்ளனர்.அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி அவர்கள் வாரணாசி, பிரயாக்ராஜ் மற்றும் அயோத்திக்கு செல்வார்கள்.

இதைதொடர்ந்து நாளை, சேவாபுரி மேம்பாட்டுத் தொகுதியின் பார்கி கிராம சபையில் விக்சித் பாரத் சங்கல்ப் யாத்ரா நிகழ்ச்சியில் மோடி பங்கேற்கிறார். இந்த நிகழ்வில் வாரணாசி மற்றும் பூர்வாஞ்சல் பகுதியில் 37 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

திடீரென வந்த ஆம்புலன்ஸ்.. உடனே வண்டியை நிறுத்தி வழிவிட்ட பிரதமர் மோடி.. வைரல் வீடியோ !!

சமீபத்தில் சட்டசபை தேர்தல் நடந்த ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், தெலுங்கானா மற்றும் மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் பிரதமர் மோடி சனிக்கிழமை விக்சித் பாரத் சங்கல்ப் யாத்திரையை துவக்கி வைத்தார்.

விக்சித் பாரத் சங்கல்ப் யாத்ரா நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது, இந்தத் திட்டங்களின் பலன்கள் இலக்கு வைக்கப்பட்ட அனைத்து பயனாளிகளையும் குறிப்பிட்ட காலத்திற்குள் சென்றடைவதை உறுதி செய்வதன் மூலம் அரசின் முதன்மைத் திட்டங்களை நிறைவு செய்யும் நோக்கத்துடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios