ஹைதராபாத்தில் பிரபல ‘குமாரி ஆண்டி’ கடைய மூடிய போலீசார்.. முதல்வர் ரேவந்த் ரெட்டி போட்ட அதிரடி உத்தரவு..
ஹைதராபாத்தில் புகழ்பெற்ற குமாரி ஆண்டி உணவுகத்தை மூட சொல்லிய போக்குவரத்து காவல்துறையின் உத்தரவை திரும்ப பெறுமாறு தெலங்கா முதல்வர் ரேவந்த் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.
ஹைதரபாத்தில் உள்ள மாதப்பூரின் ஐடிசி கோஹனூர் சந்திப்புக்கு அருகில் குமாரி ஆண்டி என்ற சாலையோர உணவகம் கடந்த 2 மாதங்கள் சமூக ஊடகங்கள் மூலம் பிரபலமானது. ஐடி ஊழியர்கள், பொதுமக்கள் சமூக ஊடக பிரபலங்கள் என நூற்றுக்கணக்கானோர் அவரின் கடைக்கு வாடிக்கையாளர்களாக உள்ளனர். இந்த உணவகத்தில் சாப்பாடு, சிக்கன், மட்டன் கறி மற்றும் பல அசைவ உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது.
இதனிடையே இந்த உணவகத்தால்ல் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து, பலர் காவல்துறையில் புகார் அளித்தனர். இந்த நிலையில் ஹைதராபாத்தில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் கடந்த 30-ம் தேதி குமாரியின் உணவகத்தை போலீஸார் மூடும் படி உத்தரவிட்டனர். கடையை வேறு இடத்தில் அமைக்குமாறும் அறிவுறுத்தி உள்ளனர்.
புதிய தொழில் தொடங்க ரூ.10 லட்சம் வரை கடன் பெறலாம்.. மத்திய அரசின் முத்ரா கடன் பற்றி தெரியுமா?
ராய்துர்கம் போக்குவரத்து காவல்துறை இன்ஸ்பெக்டர் கணேஷ் படேல் இதுகுறித்து பேசிய போது “ சுமார் 200 பேர், பெரும்பாலோர் யூடியூபர்கள், தினமும் மதியம் 12-2 மணிக்குள் வீடியோக்களை படம்பிடிப்பதற்காக இங்கு வருகிறார்கள். அந்த கடைக்கு வெளியிலேயே வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ” என்று தெரிவித்தார்
இருப்பினும், போக்குவரத்து நெரிசல் குறித்து பயணிகளிடம் இருந்து பல புகார்கள் வந்ததால், இந்த கடையை மூட முடிவு செய்ததாக அவர் கூறினார். தனது கடையை மூடியது குறித்து பேசிய குமாரி , தான் 13 ஆண்டுகளுக்கும் மேலாக கடையை நடத்தி வருகிறேன். சமூக ஊடக பிரபலம் காரணமாக கடை மூடப்பட்டதால் எனது கணவர் வருத்தப்பட்டர்.” என்று தெரிவித்தார்.
ஆந்திராவில் ஆளும் ஒய்எஸ்ஆர்சிபி அரசு, எதிர்க்கட்சித் தலைவர் நாரா சந்திரபாபு நாயுடு மற்றும் ஜன சேனா கட்சித் தலைவர் பவன் கல்யாண் ஆகியோர் உணவுக் கடையை மூடுவதில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து இந்த விவகாரம் அரசியல் சர்ச்சையாக மாறியது. ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தனது X வலைதள பக்கத்தில், ஜெகன் ரெட்டி அரசு 'குமாரி ஆன்ட்டி' உணவுக் கடையின் உரிமையாளரான சாய் குமாரிடம் ஒரு வீட்டை ஒப்படைத்த பிறகு இந்த சம்பவம் நடந்துள்ளது” என்று பதிவிட்டிருந்தது.
இந்த நிலையில் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி நேற்று டிஜிபி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் முடிவை திரும்பப் பெறுமாறு உத்தரவிட்டார். மேலும் குமாரி ஆன்ட்டி’ உணவுக் கடையை செயல்பட அனுமதிக்குமாறு உத்தரவிட்டார். இதை தொடர்ந்து குமாரி ஆண்ட்டியின் உணவுக்கடை அங்கேயே செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
யார் இந்த சம்பாய் சோரன்? புதிய ஜார்க்கண்ட் முதல்வராகும் பழங்குடியினத் தலைவர் அரசியல் பயணம்