Asianet News TamilAsianet News Tamil

திருமணத்தை முன்னிட்டு ‘ஸ்மைல் டிசைனிங்’ அறுவைசிகிச்சை செய்த மணமகன் உயிரிழப்பு.. அதிர்ச்சி சம்பவம்..

ஹைதராபாத்தில் திருமணத்தை முன்னிட்டு ‘ஸ்மைல் டிசைனிங்’ அறுவை சிகிச்சை செய்த மணமகன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Hyderabad man dies during smile designing surgery ahead of wedding Rya
Author
First Published Feb 20, 2024, 12:45 PM IST

உடல் தோற்றம் மற்றும் அழகுக்கே பலரும் முக்கியத்துவம் கொடுத்து வரும் நிலையில் பிளாஸ்டிக் சர்ஜரி, முக சீரமைப்பு அறுவைசிகிச்சை போன்ற சிகிச்சை முறைகள் அதிகரித்து வருகின்றனர். அதே போல் உடல் எடையை குறைக்கவும் பல அறுவை சிகிச்சைகள் செய்யப்படுகின்றன. இந்த அறுவை சிகிச்சைகள் எப்போதும் வெற்றிகரமாக முடியுமா என்றால் இல்லை என்பதே பதில். இதனை நிரூபிக்கும் விதமாக ஹைதராபாத்தில் ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது.

தனது திருமணத்திற்கு முன்னதாக தனது புன்னகையை மேம்படுத்த அறுவை சிகிச்சை செய்த போது இளைஞர் ஒருவர் இறந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. 28 வயதான லக்ஷ்மி நாராயண விஞ்சித் என்பவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. எனவே தனது புன்னகையை மேம்படுத்தும் விதமாக சிகிச்சை செய்ய முடிவு செய்துள்ளார். இதற்காக பிப்ரவரி 16 அன்று ஹைதராபாத் ஜூப்லி ஹில்ஸில் உள்ள FMS சர்வதேச பல் மருத்துவ மனையில் 'ஸ்மைல் டிசைனிங்' செயல்முறையை அவர் மேற்கொண்ட போது உயிரிழந்துள்ளார்.

ஆசிரமத்தில் பிணைக்கைதியாக இருக்கும் பக்தர்.. நித்தியானந்தாவுக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் நோட்டீஸ்...

அதிகளவு மயக்க மருந்து கொடுத்ததாலேயே தனது மகன் இறந்ததாக அவரின் தந்தை குற்றம் சாட்டியுள்ளார், அறுவை சிகிச்சையின் போது தனது மகன் மயக்கமடைந்ததை அடுத்து, ஊழியர்கள் தன்னை அழைத்ததாகவும் உடனடியாக தன் மகனை மருத்துவமனைக்கு அழைத்து சென்றதாகவும் கூறியுள்ளார். 

மேலும் "நாங்கள் அவரை அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம், அங்கு வரும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்," என்று கூறினார்.

அறுவை சிகிச்சை குறித்து தனது மகன் தங்களுக்குத் தெரிவிக்கவில்லை என்று அவர் தெவித்துள்ளார். மேலும் தனது மகனுக்கு  உடல்நலப் பிரச்சினைகள் எதுவும் இல்லை. அவரது மரணத்திற்கு மருத்துவர்களே பொறுப்பு" என்று தெரிவித்துள்ளார்..

தூக்கம் வராமல் இருக்க மாத்திரைகள்: மாணவிக்கு மூளையில் அறுவை சிகிச்சை!

இதை தொடர்ந்து உயிரிழந்த லக்ஷ்மி நாராயணனின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், அலட்சியமாக இருந்ததாக கிளினிக் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனை பதிவுகள் மற்றும் பாதுகாப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். விரைவில் திருமண நடைபெற இருந்த நிலையில் மணமகன் ஸ்மைல் டிசைன் அறுவை சிகிச்சை செய்ததால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios