ஆசிரமத்தில் பிணைக்கைதியாக இருக்கும் பக்தர்.. நித்தியானந்தாவுக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் நோட்டீஸ்...
நித்தியானந்தாவின் ஆசிரமத்தில் தங்கள் மகனை பிணைக்கைதியாக பிடித்துவைத்திருப்பதாகவும் தங்கள் மகனை மீட்டுத்தர வேண்டும் என்று ஜார்கண்ட மாநிலத்தை சேர்ந்த பெற்றோர் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த நித்தியாயனந்தா கர்நாடகாவின் பிடதியில் ஆசிரமம் நடத்தி வந்தார். தன்னை தானே கடவுள் என்று அழைத்துக்கொள்ளும் நித்தியானந்தவை உள்நாட்டில் மட்டுமின்றி வெளிநாடுகளை சேர்ந்தவர்களும் பின்பற்றி வருகின்றனர். அப்போது நித்தியானந்தா பிரபல நடிகை ஒருவருடன் இருக்கும் அந்தரங்க காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இதை தொடர்ந்து அவர் மீது பல்வேறு பாலியல் புகார்களும் எழுப்பப்பட்டன.
அந்த வகையில் பாலியல் வன்கொடுமை வழக்கில் அவரது ஓட்டுநர் அளித்த புகாரின் பேரில் போலீசார் நித்தியானந்தாவை கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் வெளிவந்த நிலையில் பின்னர் தலைமறைவாகி விட்டார். இதனிடையே இந்துக்களுக்காக கைலாசா என்ற தனிநாட்டை உருவாக்கி உள்ளதாகவும் தனது நாட்டை ஐ.நா சபை கூட அங்கீரித்து விட்டது என்றும் நித்தியானந்தா கூறினார்.
6 பெட்டிகள்.. வைரம் முதல் தங்கம் வரை .. தமிழகம் வருகிறது ஜெயலலிதாவின் நகைகள்.. நீதிமன்றம் அதிரடி!
ஆனால் அந்த நாடு எங்கே இருக்கிறது என்பது யாருக்கும் தெரியவில்லை. போலீசார் அவரை தொடர்ந்து தேடி வரும் நிலையில் அவர் தொடர்ந்து யூ டியூபில் ஆன்மீக சொற்பொழிவுகளை ஆற்றி வருகிறார். சமீபத்தில் நடந்த அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில் கலந்து கொள்ள உள்ளதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். ஆனால் அவர் அதில் கலந்து கொள்ளவில்லை.
இந்த நிலையில் நித்தியானந்தாவின் ஆசிரமத்தில் தங்கள் மகனை பிணைக்கைதியாக பிடித்துவைத்திருப்பதாகவும் தங்கள் மகனை மீட்டுத்தர வேண்டும் என்று ஜார்கண்ட மாநிலத்தை சேர்ந்த பெற்றோர் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த இன்ஃபோசிஸ் சாப்ட்வேர் இன்ஜினியரான கிருஷ்ணகுமார் பால். இவர் தனது பெற்றோருடன் கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக தொடர்பில் இல்லை என்று கூறப்படுகிறது.
2 லட்சம் லஞ்சம் வாங்கிய இபிஎப்ஓ ஆபிசர்.. அரசு அதிகாரியை அலேக்காக தூக்கிய சிபிஐ..
இதை தொடர்ந்து ஜார்கண்ட் காவல்துறையில் தங்கள் மகனை கண்டுபிடித்து தரக்கோரி புகார் அளித்திருந்தனர். ஆனால் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்காததால் விரக்தியடைந்த கிருஷ்ணகுமாரின் பெற்றோர், உயர்நீதிமன்றத்தை நாடினர். அவரது குடும்பத்தினர் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் சுவாமி நித்யானந்தாவுக்கு நோட்டீஸ் அனுப்பக்கோரி ஜார்கண்ட் காவல்துறையினருக்கு உத்தரவிட்டது. இந்த வழக்கின் விசாரணை அறிக்கையை வழங்கவும் அரசு தரப்பு வழக்கறிஞருக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.