Asianet News TamilAsianet News Tamil

37 கிராம பெண் குழந்தைகளுக்கு 10 லட்சம் ரூபாய் வழங்கிய மருத்துவர்

ஹைதராபாத் நகரைச் சேர்ந்த மருத்துவர் ரகு ராம் தான் தத்தெடுத்துள்ள கிராமத்தைச் சேர்ந்த 37 பெண் குழந்தைகளுக்காக ரூ.10 லட்சம் ரூபாயை வங்கிக் கணக்கில் செலுத்தியுள்ளார்.

Hyderabad doctor donates Rs 10 lakh for girl child education
Author
First Published Mar 27, 2023, 6:52 PM IST

பெண் குழந்தைகளின் உயர்கல்விக்கு ஆதரவளிக்கும் முயற்சியாக, கிம்ஸ்-உஷாலக்ஷ்மி மார்பக நோய்களுக்கான மையத்தின் இயக்குனரும் மருத்துவருமான டாக்டர் பி. ரகு ராம் ரூ.10 லட்சம் தொகையை நன்கொடையாக வழங்கியுள்ளார்.

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த டாக்டர் பி. ரகு ராம் மேடக்கில் உள்ள இப்ராஹிம்பூர் என்ற குக்கிராமத்தைத் தத்தெடுத்துள்ளார். அங்குள்ள மக்களுக்கு உதவிகள் செய்துவரும் அவர், ஞாயிற்றுக்கிழமை அந்தக் கிராமத்தைச் சேர்ந்த 10 வயதுக்குட்பட்ட 37 சிறுமிகளுக்கு 10 லட்சம் ரூபாயை அவர்களது வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்தார்.

பெண் குழந்தைகளின் நலனுக்கான மத்திய அரசு கொண்டுவந்துள்ள சுகன்யா சம்ரித்தா யோஜனா திட்டத்திற்கான பங்களிப்பாக இந்தத் தொகை வழங்கப்படுகிறது. 37 சிறுமிகளின் கணக்கிலும் தலா ரூ.27,000 டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இது 21 வயதை அடையும்போது சுமார் 1 லட்சம் ரூபாயாக முதிர்ச்சியடையும். அப்போது இந்தத் தொகை அந்தப் பெண் குழந்தைகளின் உயர்கல்விக்கான செலவுகளுக்கு பயன்படும்.

2 மாத குழந்தையைக் கொன்ற சிறுமிகள்! பொம்மை போல நினைத்து விளையாடியதால் நேர்ந்த விபரீதம்!

Dr raghu ram

இதுபற்றி டாக்டர் ரகு ராம் கூறுகையில், "நான் தத்தெடுத்த கிராமமான இப்ராஹிம்பூர் கிராமத்தில் வசிப்பவர்களைச் சென்றடைந்தது என் பாக்கியம். தெலுங்கானாவில் சுமார் 10,000 கிராமங்கள் உள்ளன. அவை ஒவ்வொன்றையும் 10,000 பேர் தத்தெடுக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். அவ்வாறு ஒவ்வொரு கிராமமும் தத்தெடுக்கப்பட்டால் 'இப்ராஹிம்பூர் மாடல்' தேசத்திற்கே முன்மாதிரியாகத் திகழும்" என்றார்.

மத்திய அரசின் சுகன்யா சம்ரித்தா யோஜனா திட்டத்தில் ஓர் ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.250 முதல் அதிகபட்சம் ரூ.1.5 லட்சம் வரை செலுத்தலாம். பெண் குழந்தைகள் பயன் அடைவதற்காக இத்திட்டத்திற்கு சிறப்பு வட்டியும் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் முதலீடு செய்தால் 7.6 சதவீதம் கொடுக்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் இரண்டு பெண் குழந்தைகள் வரை மட்டுமே இந்தத் திட்டத்தில் சேர முடியும்.

ஸ்மிருதி இரானி குறித்து கொச்சையாகப் பேசிய இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஶ்ரீனிவாஸ்

Follow Us:
Download App:
  • android
  • ios