தன்னிடம் கேட்காமல் தக்காளியை பயன்படுத்தியதால், கோபமடைந்த மனைவி வீட்டை விட்டு வெளியேறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நாடு முழுவதும் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ள தக்காளி விலை பலரின் நிதிநிலையை பெரிதும் பாதித்துள்ளது. தக்காளி விலை உயர்வை மத்திய மாநில அரசுகள் கட்டுப்படுத்த வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். தக்காளி விலையை காட்டிலும், தக்காளி தொடர்பான பல்வேறு சுவாரஸ்ய சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. அந்த வகையில், மத்தியப் பிரதேசத்தின் ஷாஹ்டோல் மாவட்டத்தில் கணவன்-மனைவி இடையே சண்டைக்கு காரணமாக அமைந்தது. ஆம், டிபன் சர்வீஸ் நடத்தும் சஞ்சீவ் பர்மன், சமீபத்தில் தனது மனைவியிடம் கேட்காமல் சாப்பாடு சமைக்கும் போது இரண்டு தக்காளியை பயன்படுத்தியதால், பெரும் சண்டை ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார்.
தக்காளியை பயன்படுத்துவது குறித்து தனது மனைவியிடம் சஞ்சீவ் கலந்தாலோசிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அந்த தம்பதியிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில்,மனைவி வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். சஞ்சீவ் பர்மன் இதுகுறித்து பேசிய போது “ நான் சமைத்துக்கொண்டிருந்த காய்கறிப் பாத்திரத்தில் இரண்டு தக்காளியைப் போட்டதால் வாக்குவாதம் தொடங்கியது. அந்த சண்டைக்கு பிறகு, எங்கள் மகளுடன் தங்கள் வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்தார். அவர்களை கண்டுபிடிக்க முயன்றேன்.
ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. பின்னர், உதவிக்காக உள்ளூர் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளேன். 3 நாட்களாக என் மனைவியிடம் பேசவில்லை. அவர் எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை” என்று தெரிவித்தார். சஞ்சீவ் புகார் அளித்ததை மூத்த போலீஸ் அதிகாரி உறுதிப்படுத்தினார். சஞ்சீவின் மனைவியை தொடர்பு கொண்டு வருவதாகவும் அவரை விரைவில் கண்டுபிடிப்பதாகவும் போலீசார் உறுதியளித்துள்ளனர்.
30 லட்சம் லாபம் ஈட்டிய தக்காளி விவசாயி கொடூரமான முறையில் கொலை.. அதிர்ச்சி சம்பவம்..
