Husband who had a kissing relationship with many women
கணவர் தனக்கு துரோகம் செய்து விட்டு பல பெண்களுடன் கள்ளத் தொடர்பில் இருப்பதால் மனைவி அவரது மர்ம உறுப்பை வெட்டி கழிவரையில் தூக்கி எறிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாபின் ஜோஹிந்தர் நகரை சேர்ந்தவர் ஆசாத் சிங். இவருக்கு பல பெண்களுடன் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இந்த விஷயம் அறிந்த அவரது மனைவி பலமுறை அவரை எச்சரித்துள்ளார். ஆனாலும், அவர் திருந்துவதாக தெரியவில்லை.
இதனால் கோபம் தலைக்கேறி, கணவன் தூங்கிக்கொண்டிருந்த போது, அவரின் ஆண் உறுப்பை வெட்டி, கழிவறையில் வீசியுள்ளார். இதனையடுத்து உதவி கேட்டு ஆசாத் அலறிய சத்தம் கேட்டு அவரது குடும்பத்தினர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஆசாத் சிங் ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடி வருகிறார். துரோகம் செய்த கணவனின் பிறப்புறுப்பை வெட்டியெறிந்த மனைவியை போலீஸாரால் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
