husband killed the why schocking reson

டெல்லியை சேர்ந்த ஒருவர் தன்னுடைய மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு, குற்ற உணர்ச்சியில், அவரே போலீஸ் நிலையம் சென்று சரணடைந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

யாசின் என்பவர் கடந்த 2017 ஆம் ஆண்டு, ஜான்வி என்கிற பெண்ணை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். ஆரம்பத்தில் இவர்களுடைய திருமண வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக சென்றுள்ளது. 

பின் தன்னுடைய கணவர் மீது கொண்ட அன்பின் காரணமாக தினமும் யாசின், வேலை முடித்து விட்டு வீட்டுக்கு வந்ததும் பல கேள்விகளை கேட்டு நச்சரித்துள்ளார் ஜான்வி. ஒரு நிலையில் இது அதிகரித்து மிகப்பெரிய பிரச்சனையாக வெடித்துள்ளது.

சம்பவம் நடந்த அன்று, யாசின் வேலை முடித்து வந்துள்ளார். பின் ஜான்வி எதோ சந்தேகமாக கேள்விகள் கேட்க அது வாக்குவாதத்தில் முடிந்தது. சண்டை முற்றியதும் ஒரு நிலையில் ஆத்திரம் தலைக்கேறி, மனைவியை கழுத்தை நெறித்து கொலை செய்தார் யாசின்.

பின் குற்ற உணர்ச்சி தாங்கமுடியாமல் தானாக காவல் நிலையம் சென்று, நடந்த வற்றை காவல் நிலையத்திற்கு சென்று தெரிவித்து சரணடைந்துள்ளார். இதைத்தொடர்ந்து யாசின் கைது செய்யப்பட்டுள்ளார்.