hundredth satellite of india successfully launched
இந்தியாவின் 100வது செயற்கைக்கோளான கார்டோசாட்-2 விண்ணில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
இந்திய விண்வெளி ஆய்வுமையமான இஸ்ரோ, வர்த்தக ரீதியான செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவிவருகிறது. இதன் ஒருபகுதியாக் இஸ்ரோவின் வடிவமைப்பான கார்டோசாட் 2 செயற்கைக்கோள் இன்று காலை 9.28 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள முதலாவது ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது.
பிஎஸ்எல்வி-சி40 ராக்கெட்டின் மூலம் இந்த செயற்கைக்கோள், விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த ராக்கெட்டில், இந்தியாவின் 3, கனடா, பின்லாந்து, அமெரிக்கா, பிரான்ஸ், கொரியா, பிரிட்டன் ஆகிய நாடுகளின் 28 செயற்கைக்கோள்கள் என மொத்தம் 31 செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன.
இந்தியாவின் கார்டோசாட்-2 செயற்கைக்கோள், பூமியின் இயற்கை வளங்களை பல கோணங்களில் படமெடுத்து அனுப்பும். இந்த செயற்கைக்கோளில், சக்திவாய்ந்த கேமராக்களும் தொலையுணர்வு கருவிகளும் பொருத்தப்பட்டுள்ளன.
காலை 9.28 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்ட செயற்கைக்கோள், வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இந்த வெற்றியை இஸ்ரோ விஞ்ஞானிகள் கொண்டாடி வருகின்றனர்.
