Asianet News TamilAsianet News Tamil

BJP Meeting: 2024 மக்களவைத் தேர்தலுக்கு தயாராவது எப்படி? பாஜக உயர் நிர்வாகிகள் கூட்டம் தொடங்கியது

2024ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு தயாராவது, 2023ம் ஆண்டு பல்வேறு மாநிலங்களில் நடக்கும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு எவ்வாறு தயாராவது குறித்த பாஜகவின் உயர் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று தொடங்கியது.

how to get ready for the Lok Sabha elections in 2024? PM Modi  inaugurates a key BJP meeting
Author
First Published Dec 5, 2022, 3:11 PM IST

2024ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு தயாராவது, 2023ம் ஆண்டு பல்வேறு மாநிலங்களில் நடக்கும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு எவ்வாறு தயாராவது குறித்த பாஜகவின் உயர் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று தொடங்கியது.

பிரதமர் மோடி இந்தக் கூட்டத்தைத தொடங்கி வைத்தார். 2 நாட்கள் நடக்கும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் மோடி நாளை மாலை உரையாற்றுவார் எனத் தெரிகிறது.

ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்ரா ராஜஸ்தான் சென்றது

குஜராத் தேர்தலில் வாக்களிப்பதற்காக அகமதாபாத்துக்கு சென்றிருந்த பிரதமர் மோடி, இன்று காலை வாக்களித்துவிட்டு அங்கிருந்து நேரடியாக டெல்லி திரும்பினார். 

டெல்லியில் பாஜக தலைமை அலுவலகத்தில் நடக்கும்  பாஜக உயர் நிர்வாகிகள், தேசியப் பொதுச்செயலாளர்கள், மாநிலத் தலைவர்கள், செயற்குழு உறுப்பினர்கள், பொதுச்செயலாளர்கள் ஆகியோர் பங்கேற்கும் 2 நாள் ஆலோசனைக் கூட்டத்துக்கு வந்த பிரதமர் மோடியை பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா வரவேற்றார். 

அனைத்து மாநிலத் தலைவர்கள், பொதுச்செயலாளர்கள், மாநிலப் பொறுப்பாளர்கள், உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்கும் இந்தக் கூட்டத்தில் 2024ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு எவ்வாறு தயாராவது, 2023ம் ஆண்டில் பல்வேறு மாநிலங்களில் நடக்கும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு எவ்வாறு தயாராவது குறித்த ஆலோசனை நடத்தப்படும்.

மாற்றத்துக்கு தயாராகிறதா பாஜக? தேசிய, மாநில நிர்வாகிகள் பங்கேற்கும் மிகப்பெரிய கூட்டம்

இந்தக் கூட்டத்தில் பாஜக அரசின் சாதனைகள், திட்டங்கள் குறித்தும் மக்களிடம் எடுத்துச் செல்வது குறித்தும் ஆலோசிக்கப்படும். கட்சியை அமைப்புரீதியாக வலுப்படுத்துவது, எந்தமாநிலங்களில் வலுவிழந்து காணப்படுகிறதோ அங்கு தேவையான ஆலோசனைகள் வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.

ஜி20 உச்சி மாநாட்டின் தலைவராக இந்தியா பொறுப்பேற்றுள்ள நிலையில் பாஜகவின் இந்த ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது. இந்தக் கூட்டத்தில் ஜி20 மாநாட்டை எவ்வாறுசிறப்பாக நடத்துவது, மக்களிடம் எவ்வாறு ஜி20 மாநாட்டை கொண்டு சென்று விழிப்புணர்வு நடத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது.
இன்றும், நாளையும் நடக்கும் கூட்டத்தை தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா வழிநடத்துகிறார். நாளை மாலை நடக்கும் கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றஉள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios