இந்திய ராணுவம் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட மற்றும் மேம்படுத்தப்பட்ட இலகு ரக பீரங்கியை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டது. இத்தகைய பீரங்கிகள் 25 டன்னுக்கு மேல் எடை கொண்டதாக இருக்கக்கூடாது.
உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கைக்குப் பிறகு உலகெங்கிலும் வேகமாக வளர்ந்துவரும் புவிசார் அரசியல் சூழ்நிலை காரணமாக, இந்திய ராணுவத்தின் லட்சிய திட்டமான ஜோராவார் திட்டம் பாதிப்படைந்துள்ளது. இந்தியா இத்திட்டத்திற்காக வெளிநாடுகளில் இருந்து சில முக்கியமான பொருட்களை வாங்குவதில் சவால்களை எதிர்கொள்கிறது. 2023ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் வரவிருந்தவை, அடுத்த ஆண்டு ஜனவரிக்குள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
"ரஷ்யா-உக்ரைன் போரின் காரணமாக விநியோகச் சங்கிலி சீர்குலைவுந்துள்ளது. இதனால், ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் உட்பட மூன்று நாடுகளில் இருந்து சில முக்கியமான கூறுகளைப் பெறுவதில் சிக்கல் உள்ளது" என பாதுகாப்பு அமைச்சகத்தின் வட்டாரங்கள் கூறுகின்றன.
"இந்திய ராணவ வாகனங்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இன்ஜின், எலக்ட்ரானிக் மற்றும் எலக்ட்ரிக்கல் பாகங்களைச் சார்ந்திருக்கின்றன" எனவும் பாதுகாப்பு அமைச்சக வட்டாரத்தைச் சேர்ந்த ஒருவர் கூறுகிறார்.
From The India Gate: காங்கிரஸின் தேர்தல் டார்கெட்டும் பாஜகவின் ராஜஸ்தான் ராணியும்
கிழக்கு லடாக்கில் அதிக உயரத்தில் சீன எல்லையில் ஏற்பட்ட மோதலை அடுத்து இந்திய ராணுவத்தின் கப்பற்படையில் இலகு ரக பீரங்கிகள் இருக்கவேண்டியதன் அவசியம் உணரப்பட்டது. போரின் தன்மை மாறி, இப்போது அதிக அளவுக்கு தொழில்நுட்பத்தால் இயக்கப்படுகிறது. இந்திய ராணுவம் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட மற்றும் மேம்படுத்தப்பட்ட இலகு ரக பீரங்கியை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டது. இத்தகைய பீரங்கிகள் 25 டன்னுக்கு மேல் எடை கொண்டதாக இருக்கக்கூடாது.
உயரமான பகுதிகள், எல்லைப் பகுதிகள், தீவுப் பகுதிகள் என பல்வேறு நிலப்பரப்புகளில் செயல்படும் வகையில் ஜோராவார் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
"கணிசமான தாக்கும் திறன், பாதுகாப்பு, கண்காணிப்பு மற்றும் தகவல் தொடர்பு திறன்களுடன் கூடிய இலகு ரக பீரங்கிகள் தேவை. பல்வேறு வகையான அச்சுறுத்தல்களை திறமையுடன் எதிர்கொள்ள இந்திய ராணுவத்திற்கு இவை அவசியம். ஒரு பீரங்கி டேங்கர் வாகனம் - இந்தியன் லைட் டேங்க் (AFV-ILT) முக்கிய தொழில்நுட்பங்களை உள்ளடக்கியது. இதன் மூலம் பல வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றன" எனவும் பாதுகாப்புத்துறை அதிகாரி ஒருவர் சொல்கிறார்.
தோடர் பழங்குடியின மக்களுடன் ராகுல் காந்தி உற்சாக நடனம்!
செயற்கை நுண்ணறிவு, ட்ரோன் கட்டுப்பாடு, பாதுகாப்பு அமைப்பு, உயர்மட்ட விழிப்புணர்வு ஆகியவற்றை உள்ளடக்கிய முக்கிய தொழில்நுட்பங்களை ஜோராவர் கொண்டிருக்கும் என்று அவர் தெரிவிக்கிறார்.
ராணுவம் கணிசமான எண்ணிக்கையிலான T-72 மற்றும் T-90 பீரங்கிகளையும் சேர்க்க திட்டமிட்டுள்ளது. “முதன்மையாக சமவெளிகளிலும் பாலைவனங்களிலும் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள பீரங்கிகள் உயரமான பகுதிகளில் ஒரு வரம்புக்குள் தான் செயல்பட முடியும். ரான் ஆஃப் கட்ச்சின் எல்லைப் பகுதிகளில் பணிபுரிபவர்கள் இத்தகைய சிக்கலை எதிர்கொள்கின்றனர்.
தற்போது, இந்திய ராணுவத்திடம் 60 டன் எடை கொண்ட அர்ஜுன் போர் டாங்கியும், 48 டன் எடை கொண்ட T-90 , 45 டன் எடை கொண்ட T-70 ரக போர் டாங்கிகளும் உள்ளன. ஆனால் ஜோராவர் 25 டன் எடையுடையதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் கிடைக்குமா? விற்பனை தொடங்குவது எப்போது?
