Asianet News TamilAsianet News Tamil

NRI-ன் ரூ.40 கோடி மதிப்புள்ள நிலத்தை ரூ.6 கோடிக்கு விற்ற மோசடி கும்பல்.. சிக்கியது எப்படி?

40 கோடி மதிப்புள்ள அந்த இடத்தை வெறும் 6.6 கோடி ரூபாய்க்கு பதிவு செய்யப்பட்டதற்கான ஆவணங்கள் காட்டப்பட்டுள்ளன.

How did the fraud gang who sold NRI man's land worth Rs.40 crore for Rs.6 crore in Gurgaon Rya
Author
First Published Sep 29, 2023, 2:37 PM IST

குர்கானில் ஒரு NRIக்கு சொந்தமான 15 ஏக்கர் சொத்தை மோசடி செய்து விற்றது தொடர்பாக ஒரு போலீஸ் அதிகாரி மற்றும் ஒரு தற்காலிக அரசு ஊழியர்கள் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். 40 கோடி மதிப்புள்ள அந்த இடத்தை வெறும் 6.6 கோடி ரூபாய்க்கு பதிவு செய்யப்பட்டதற்கான ஆவணங்கள் காட்டப்பட்டுள்ளன.

1980களில் பூரண் மன்சந்தா என்ற வெளிநாடு வாழ் இந்தியர், குர்கானில் உள்ள பேகம்பூர் கட்டோலா கிராமத்தில் 2 ஏக்கர் நிலத்தை வாங்கி உள்ளார். இந்த நிலையில் இந்த ஆண்டு மார்ச் மாதம் தான் தனது நிலம் போலியாக விற்கப்பட்டது அவருக்கு தெரியவந்தது. இதையடுத்து அவர் காவல்துறையில் புகார் அளித்திருந்தார். குர்கானில் உள்ள பேகம்பூர் கட்டோலா கிராமத்தில் உள்ள எஸ்பிஆர் சாலையில் உள்ள தனது நிலம் போலி ஆவணங்களைப் பயன்படுத்தி சுபாஷ் சந்தின் பெயரில் மோசடியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவரது புகாரில் மன்சந்தா கூறியிருந்தார். .

அதே நேரத்தில் பொருளாதார குற்றப்பிரிவுப் பிரிவைச் சேர்ந்த ஏஎஸ்ஐ பிரதீப் குற்றம் சாட்டப்பட்டவர்களிடமிருந்து அவர்களுக்குச் சாதகமாகச் செயல்பட பணம் பறித்தார். விசாரணையைத் தொடர்ந்து, மார்ச் 16, 2022 அன்று இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) 120-பி, 420, 467, 468, மற்றும் 471 ஆகிய பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஏஎஸ்ஐ பிரதீப் மீது ஊழல் தடுப்புப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. .

போலீசார் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் தெரியவந்தது. இதுகுறித்து பேசிய காவல்துறை அதிகாரி ஒருவர் “ குற்றம் சாட்டப்பட்ட சுபாஷ் சந்த், புகார் அளித்தவர் ஒரு என்ஆர்ஐ என்பதையும், பெரும்பாலும் வெளிநாட்டில் வசிப்பவர் என்பதையும் அறிந்திருந்தார். அவர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து போலி ஆவணங்களை உருவாக்கி, அந்த ஆவணங்களின் அடிப்படையில் நிலத்தை மோசடி செய்து பதிவு செய்தார். கணிசமான லாபம் தருவதாக உறுதியளித்து நில ஆவணங்களை அவர்களது பெயரில் பெற்றுக்கொள்ளும்படி சுபாஷ் தனது மருமகன் டோனி, வழக்கறிஞரிடம் அறிவுறுத்தினார். அக்டோபர் 2021 இல், டோனி நில விவரங்கள் அடங்கிய 1996 ஆம் ஆண்டின் உண்மையான லெட்ஜரை சஞ்சய் மூலம் பெற்றார். பின்னர், அவர்கள் கணினிகள், ஸ்கேனர்கள் மற்றும் மென்பொருளைப் பயன்படுத்தி சுபாஷ் சந்த் என்ற பெயரில் போலி ஜிபிஏவை உருவாக்கி, அதற்குப் பதிலாக உண்மையான ஜிபிஏவை லெட்ஜரில் வைத்தனர் என்று அதிகாரி கூறினார்.

தற்கொலை குறித்து கூகுளில் தேடிய நபர்.. 2 மணிநேரத்தில் உயிரை காத்த போலீசார் - சினிமாவை மிஞ்சும் பரபரப்பு!

மேலும் போலி ஆவணத்தில் 2001 இல் ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த மேஜர் பி கே மேத்தா என்ற நபரின் பெயரை சாட்சியாகப் பயன்படுத்தினார். மற்றொரு சாட்சியான சந்தீப் என்ற வழக்கறிஞரின் பெயரும் புனையப்பட்டது. போலி ஆவணங்களில் டோனி யாதவ் போலி கையெழுத்து போட்டது கண்டுபிடிக்கப்பட்டது. போலி ஆவணங்களின் அடிப்படையில், என்.ஆர்.ஐ.க்கு சொந்தமான சுமார் 1.9 ஏக்கர் நிலம் வினோத் என்ற நபருக்கு மாற்றப்பட்டது என்று போலீசார் தெரிவித்தனர். 6.6 கோடிக்கு நிலம் வாங்கப்பட்டதாக போலி ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணையில், பொருளாதார குற்றப்பிரிவில் நியமிக்கப்பட்ட ஏஎஸ்ஐ பிரதீப், குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் பணம் வாங்கியது கண்டுபிடிக்கப்பட்டு, கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

இதனிடையே “குருகிராம் காவல்துறை ஊழலை சகிப்புத்தன்மையற்ற கொள்கையில் செயல்படுகிறது. எனவே, ஏதேனும் ஒரு போலீஸ் ஊழியர் அல்லது அதிகாரி எந்த வகையிலும் சம்பந்தப்பட்டிருப்பது கண்டறியப்பட்டால், அவர் மீது உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று குருகிராம் போலீஸ் கமிஷனர் விகாஸ் குமார் அரோரா கூறினார்.

Follow Us:
Download App:
  • android
  • ios