பிரதமர் மோடி சொன்னதைச் செய்த ஹிஸ்புல் பயங்கரவாதியின் சகோதரர்! வீட்டில் மூவர்ணக் கொடியை ஏற்றி முழக்கம்!
சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஹிஸ்புல் பயங்கரவாதியின் சகோதரர் ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபோரில் உள்ள அவரது இல்லத்தில் தேசியக் கொடியை ஏற்றி வீடியோ வெளியிட்டுள்ளார்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஹிஸ்புல் பயங்கரவாதியின் சகோதரர் ஜாவித் மட்டூ ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபோரில் உள்ள தனது இல்லத்தில் தேசியக் கொடியை ஏற்றியுள்ளார். அதனை வீடியோவாகவும் பதிவு செய்து வெளியிட்டிருக்கிறார்.
வீடியோவில் ஹிஸ்புல் பயங்கரவாதி ஜாவித் மட்டூவின் சகோதரர் ரயீஸ் மட்டூ தனது வீட்டின் ஜன்னல் அருகே இருந்து மூவர்ணக் கொடியை அசைப்பதைக் காணமுடிகிறது.
பைசல் / சாகிப் / முசைப் என அழைக்கப்படும் ஜாவித் மட்டூ, ஹிஸ்புல் முஜாயிதீன் பயங்கரவாத அமைப்பில் தொடர்புடைய முக்கிய பயங்கரவாதி ஆவார். பாதுகாப்பு ஏஜென்சிகளின் பட்டியலில் இடம்பெற்றிருக்கும் இவர் காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள டாப் 10 தேடப்படும் பயங்கரவாதிகளில் ஒருவர்.
'கையை வெட்டுவோம்': எச்சரிக்கையை மீறி, ஹரியானா மகாபஞ்சாயத்தில் வெறுப்பு பேச்சு
மோடி அழைப்பு
சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஆகஸ்ட் 13 முதல் 15 வரை நடைபெறும் 'ஹர் கர் திரங்கா' (ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ணக் கொடி) என்ற இயக்கத்தில் பங்கேற்குமாறு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு வலியுறுத்தி இருக்கிறார்.
ஞாயிற்றுக்கிழமை, ஸ்ரீநகரில் ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா பங்கேற்ற மெகா கொடி ஊர்வலம் நடைபெற்றது. அப்போது, "ஜம்மு காஷ்மீரின் ஒவ்வொரு இளைஞரும் நாட்டின் பிற பகுதி மக்களைப் போலவே தேசியக் கொடியை நேசிக்கிறார்கள் என்பதை அனைவரும் புரிந்துகொண்டிருப்பார்கள்" என்று மனோஜ் சின்ஹா கூறினார்.
ஸ்ரீநகர் தவிர, புத்காம் உட்பட பல மாவட்டங்களிலும் ஞாயிறுக்கிழமை தேசியக் கொடியை ஏந்தி கொடி ஊர்வலம் நடத்தப்பட்டன.
நிலவில் இருந்து 150 கி.மீ. தூரத்தில் சந்திரயான்-3! 3வது உயரக் குறைப்பு நடவடிக்கை நிறைவு