நிலவில் இருந்து 150 கி.மீ. தூரத்தில் சந்திரயான்-3! 3வது உயரக் குறைப்பு நடவடிக்கை நிறைவு
சந்திரயான்-3 விண்கலகத்தை நிலவை நோக்கி முன் நகர்த்தும் மூன்றாவது செயல்முறை மூலம் நிலவுக்கும் விண்கலத்துக்கும் இடையேயான தூரம் 150 கி.மீ. ஆகக் குறைந்திருக்கிறது.
சந்திரயான்-3 விண்கலகத்தை நிலவை நோக்கி நகர்த்தும் மூன்றாவது செயல்முறை இன்று (திங்கட்கிழமை) நிறைவு செய்யப்பட்டிருக்கிறது. இதன் மூலம் சந்திரயான்-3 விண்கலம் சந்திரனுக்கு மேலும் நெருக்கமாக முன்னேறி இருக்கிறது.
"சந்திரயான்-3 மிஷனில் சுற்றுப்பாதை சுழற்சி கட்டம் தொடங்குகிறது. இன்று நிகழ்த்தப்பட்ட துல்லியமான நடவடிக்கையில் விண்கலம் 150 கிமீ x 177 கிமீ சுற்றுவட்டப் பாதையை அடைந்துள்ளது. அடுத்த நகர்வு ஆகஸ்ட் 16, 2023 அன்று காலை சுமார் 8.30 மணிக்கு நடந்த திட்டமிடப்பட்டுள்ளது" என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் 5ஆம் தேதி சந்திரயான்-3 நிலவின் சுற்றுப்பாதையில் நுழைந்தது. பின்னர், ஆகஸ்ட் 7ஆம் தேதி நிலவைச் சுற்றும் விண்கலத்தின் உயரத்தை சுமார் 14,000 கிமீ குறைத்து, சந்திரனுக்கு அருகில் 4,313 கி.மீ. தூரத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. பின், ஆகஸ்ட் 9ஆம் தேதி மேலும் உயரம் குறைக்கப்பட்டு 1,437 கி.மீ தொலைவில் நிலைநிறுத்தப்பட்டது.
'கையை வெட்டுவோம்': எச்சரிக்கையை மீறி, ஹரியானா மகாபஞ்சாயத்தில் வெறுப்பு பேச்சு
இதைத் தொடர்ந்து இன்று மூன்றாவது உயரக் குறைப்பு செயல்பாட்டின் மூலம் இஸ்ரோ விண்கலத்திற்கும் சந்திரனுக்கும் இடையிலான தூரத்தை மேலும் குறைத்துள்ளது.
ஆகஸ்ட் 16 அன்று, சந்திரயான்-3 100 கி.மீ. வட்ட சுற்றுப்பாதையில் நுழையும். ஆகஸ்ட் 17 அன்று, விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் ஆகியவற்றை உள்ளடக்கிய தரையிறங்கும் தொகுதி உந்துவிசை தொகுதியிலிருந்து பிரிந்து செல்லும். தரையிறங்கும் தொகுதி பிரிந்ததும், அதனை 30 கி.மீ. x 100 கி.மீ. தொலைவில் உள்ள சுற்றுப்பாதைக்கு இஸ்ரோ நகர்த்தும்.
பின்னர் தரையிறங்கும் தொகுதியில் உள்ள சிறிய ராக்கெட்கள், எஞ்சின்கள், சென்சார்கள் உள்ளிட்டவை சரியாக இயங்குகின்றனவா என்று சோதனை செய்யப்படும். சோதனைக்குப் பின் ஆகஸ்ட் 23ஆம் தேதி சந்திரயான்-3 நிலவில் மென்மையான தரையிறக்கம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பீகாரில் நர்ஸ் கூட்டு பலாத்காரம்... கொலை செய்து ஆம்புலன்சில் மறைத்து வைத்த மருத்துவர்