பெங்களூரு கெம்பேகவுடா விமான நிலையம் தனது அறிவிப்புப் பலகைகளில் இருந்து இந்தியை நீக்கியுள்ளது. தற்போது கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே தகவல்கள் உள்ளன. இந்த நடவடிக்கை சமூக ஊடகங்களில் விவாதத்தைத் தூண்டியுள்ளது.

Hindi language removed from Bengaluru airport: பெங்களூரு கெம்பேகவுடா விமான நிலையம் தனது அனைத்து அறிவிப்புப் பலகைகளில் இருந்தும் இந்தியை நீக்கியுள்ளது. அங்கு இப்போது கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இந்த மாற்றத்தின் வீடியோ சமூக ஊடகமான எக்ஸ்-இல் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை இதுவரை இரண்டு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பார்த்துள்ளனர். இதற்கு மக்கள் கலவையான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

விமான நிலையத்தில் இருந்து இந்தி பெயர் பலகைகள் அகற்றம் 

இந்த நடவடிக்கை கன்னட மொழிக்கு ஊக்கமளிப்பதாக சிலர் பாராட்டினர். ஆனால் இது சர்வதேச விமான நிலையத்தில் மற்றவர்களை ஒதுக்குவது போல் இருப்பதாக பலர் விமர்சித்தனர். இதுகுறித்து சமூக வலைத்தள பயனர் ஒருவர் கேள்வி எழுப்பி, "ஆங்கிலம் மற்றும் கன்னடம் தெரிந்தவர்கள் மட்டுமே பெங்களூருவுக்கு வருகிறார்கள் என்று நினைக்கிறீர்களா? மெட்ரோ நிலையங்களில் இந்தி இல்லாவிட்டால் பரவாயில்லை, ஆனால் விமான நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்களில் அது இருக்க வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார். 

ராகுல் காந்தி, சோனியாவின் ரூ.700 கோடி சொத்துகளை பறிமுதல் செய்ய நடவடிக்கை!

துபாய் இளவரசர் இந்தியில் ட்வீட் 

மற்றொரு பயனர், "துபாய் இளவரசர் இந்தியாவின் மரியாதையை வெளிப்படுத்த இந்தியில் ட்வீட் செய்கிறார், ஆனால் நம் குடிமக்களே இந்தியை புறக்கணிக்கிறார்கள், அதே நேரத்தில் இது உலகில் அதிகம் பேசப்படும் மொழிகளில் ஒன்றாகும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

Scroll to load tweet…


40 சதவீதத்திற்கும் அதிகமானோர் இந்தி பேசுகின்றனர் 

சமூக ஊடகங்களில் வைரலான வீடியோவால் விவாதம் தொடங்கியது. விமான நிலையத்தில் டிஜிட்டல் டிஸ்ப்ளே போர்டில் கன்னடம், ஆங்கிலம் மற்றும் உருது மொழிகளில் தகவல்கள் காட்டப்பட்டன, ஆனால் இந்தியில் இல்லை. 40 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் இந்தி பேசும் நாட்டில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பலரும் கருத்துகளை கூறி வருகின்றனர். 

விமான நிலைய அதிகாரிகள் விளக்கம் 

இந்நிலையில், பெங்களூரு விமான நிலைய அதிகாரிகள் இந்த விவகாரத்தில் விளக்கம் அளித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிவிப்பில், ''பெங்களூரு கெம்பேகவுடா விமான நிலையத்தில் அறிவிப்புப் பலகைகளில் அமைப்பில் எந்த மாற்றமும் இல்லை. ஆரம்பத்திலிருந்தே, விமானத் தகவல்கள் கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே இருந்தன. அறிவிப்புப் பலகைகளில் இந்தி மொழி இருந்தது. ஆனால் விமானத் தகவல்களில் அது இல்லை. தொடக்கத்திலிருந்தே இந்தி சேர்க்கப்படவில்லை'' என்று கூறப்பட்டுள்ளது.

மகனுக்காக மொட்டையடித்து வேண்டுதலை நிறைவேற்றிய பவன் கல்யாணின் மனைவி!