MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • இந்தியா
  • ராகுல் காந்தி, சோனியாவின் ரூ.700 கோடி சொத்துகளை பறிமுதல் செய்ய நடவடிக்கை!

ராகுல் காந்தி, சோனியாவின் ரூ.700 கோடி சொத்துகளை பறிமுதல் செய்ய நடவடிக்கை!

நேஷனல் ஹெரால்டு வழக்கில் ராகுல் காந்தி, சோனியா காந்தியின் ரூ.700 கோடி சொத்துகளை பறிமுதல் செய்ய அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

2 Min read
Rayar r
Published : Apr 14 2025, 07:57 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

ED set to seized ragul ganghi family asset: இந்தியாவில் நேஷனல் ஹெரால்டு என்ற பத்திரிகையை அசோசியேடெட் ஜர்னல் லிமிடெட் நிறுவனம் நடத்தி வந்தது. நேஷனல் ஹெரால்டு நமது நாட்டின் முதல் பிரதமர் நேரு தொடங்கிய பத்திரிகையாகும். கடன் பிரச்சனையில் நேஷனல் ஹெரால்டு மூடப்பட்ட நிலையில், இதை சரி செய்ய காங்கிரஸ் கட்சி ரூ.90 கோடி கடன் வழங்கியதாக கூறப்படுகிறது. 

24
Rahul Gandhi and Sonia Gandhi

Rahul Gandhi and Sonia Gandhi

இதற்கிடையே கடந்த 2018ம் ஆண்டு நேஷனல் ஹெரால்டு நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.2,000 கோடி சொத்துகளை  காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் சட்டவிரோதமாக யங் இந்தியன் லிமிடெட் நிறுவனத்தின் பெயருக்கு மாற்றிக்கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. ‛யங் இந்தியா' நிறுவனத்தில் சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் சுமார் 76% பங்குகளை வைத்திருந்ததாகவும், ரூ.2,000 கோடி மதிப்பிலான சொத்துகளை வெறும் 50 லட்சம் செலவில் மாற்றிவிட்டதாகவும் பாஜக தலைவர் சுப்ரமணிய சுவாமி குற்றம்சாட்டினார். 

மேலும் இந்த முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த உத்தர வேண்டும் என்று பாஜக தலைவர் சுப்ரமணிய சுவாமி டெல்லி உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதை எதிர்த்து ராகுல் காந்தியும், சோனியா காந்தியும் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடந்த கடந்த 2021ம் ஆண்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

மகனுக்காக மொட்டையடித்து வேண்டுதலை நிறைவேற்றிய பவன் கல்யாணின் மனைவி!
 

34
enforcement directorate

enforcement directorate

இந்த வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறையும், வருமான வரித்துறையும் விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழ்க்கில் கடந்த 2023ம் ஆன்டு நவம்பர் மாதம் மும்பை, டெல்லி, லக்னோவில் உள்ள அசோசியேடெட் ஜர்னல் லிமிடெட் நிறுவனத்திற்கு சொந்தமான ரூ.661 கோடி சொத்துகளையும், ரூ.91.2 கோடி பங்குகளையும் பறிமுதல் செய்வதாக அமலாக்கத்துறை அறிவித்து இருந்தது.

44
National Herald case

National Herald case

இந்த நிலையில் இந்த சொத்துகளை பறிமுதல் செய்ய அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதாவது டெல்லியில் உள்ள ஹெரால்டு ஹவுஸ், மும்பை, லக்னோவில் உள்ள சொத்துகள் இருக்கும் பகுதியில் அந்த இடங்களை காலி செய்ய வேண்டும் என அமலாக்கப்பிரிவு நோட்டீஸ்களை ஒட்டியுள்ளது. இதன்மூலம் சோனியா காந்தி, ராகுல் காந்திக்கு சொந்தமான ரூ.661 கோடி சொத்துகள் அமலாக்கப்பிரிவின் வசம் செல்ல உள்ளது. இது சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்திக்கு மிகப்பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

அம்பேத்கர் ஜெயந்தி: இளைஞர்களுக்கான யோகி அரசின் சிறப்பு ஏற்பாடு!
 

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
அமலாக்க இயக்குனரகம்
இந்தியா
இந்திய தேசிய காங்கிரஸ்
ராகுல் காந்தி
Latest Videos
Recommended Stories
Recommended image1
‘திமுக- டிஎம்சியின் காட்டு ஆட்சிகளுக்கு முடிவு..! 10 சாணக்கியத் திட்டங்களுடன் களமிறங்கிய பாஜக..!
Recommended image2
இந்தியாவில் அதிவேக வெப்பநிலை உயர்வு! 10 ஆண்டுகளில் சராசரியாக 0.9 டிகிரி அதிகரிப்பு!
Recommended image3
பீகாரில் கைமாறிய உள்துறை! நிதிஷ் குமாரின் புதிய அமைச்சரவையில் பாஜக ஆதிக்கம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved