இமாச்சல பிரதேசத்தில் பள்ளி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஓட்டுநர் உட்பட 7 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தன. 

இமாச்சல பிரதேச மாநிலம் சிர்மார் மாவட்டம் சங்கரா நகரில் இன்று காலை 20-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களை ஏற்றிக்கொண்டு பள்ளி பேருந்து சென்றிருக்கொண்டிருந்தது. அப்போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தாறுமாறாக ஓடியது. பின்னர் எதிர்பாராத விதமாக பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்தது. 

இந்த விபத்தில் 6 பள்ளிக்குழந்தைகள் உட்பட 7 பேர் உயிரிழந்தனர். மேலும் 12 குழந்தைகள் பலத்த காயம் ஏற்பட்டது. இதுதொடர்பாக போலீசாருக்கு உடனே தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் சிலரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.