ஹிஜாப் சர்ச்சை: பெண்கள் சிறிய உடை அணிவது தான் பிரச்சனை.. தெலங்கானா அமைச்சர் கருத்தால் சர்ச்சை..
பெண்கள் சிறிய ஆடைகளை அணிவது தான் பிரச்சனை என்று தெலங்கானா உள்துறை அமைச்சர் மகமூத் அலி தெரிவித்துள்ளார்
சமீப காலமாக ஹிஜாப் அணிவது தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வருகின்றன. அந்த வகையில் ஹைதராபாத்தில் உள்ள சந்தோஷ் நகரில் உள்ள மகளிர் பட்டப்படிப்பு கல்லூரி மாணவிகளை தேர்வு எழுதுவதற்கு முன் அவர்களின் ஹிஜாபை கழற்றுமாறு கல்லூரி நிர்வாகம் கூறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த கல்லூரியில் தற்போது தேர்வுகள் நடந்து வருகின்றன. நேற்று நடத்தப்பட்ட தேர்வுக்கு பல முஸ்லிம் மாணவர்கள் ஹிஜாப் அணிந்திருந்தனர்.
எனினும் அவர்களை தேர்வு மையத்திற்குள் அனுமதிக்க கல்லூரி ஊழியர்கள் மறுத்தனர். ஹிஜாப் அணிந்து வர வேண்டாம் என அறிவுறுத்தியதாக தெரிகிறது. இதனால் மாணவர்களுக்கும் கல்லூரி ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இறுதியாக, ஹிஜாபை கழற்றிய பின்னரே மாணவிகள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
டுவீட் செஞ்சாலுமா கைது செய்வீங்க; இதுதான் ஜனநாயகமா?மத்திய அமைச்சர் கேள்வி!!
இந்த சூழலில் இந்த விவகாரம் குறித்து குறித்து, தெலங்கானா உள்துறை அமைச்சர் முகமது மஹ்மூத் அலியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர் “ ஹிஜாப் அணியக்கூடாது என்று எங்கும் எழுதப்படவில்லை. விரைவில் இந்த விவகாரம் குறித்து நடவடிக்கை எடுப்போம்” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர் “ பெண்கள் ஐரோப்பிய பாணியில் ஆடை அணியக் கூடாது' என்றும், 'பெண்கள் சிறிய ஆடைகளை அணிவதால் பிரச்னை ஏற்படும்' என்றும் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் "நீங்கள் என்ன வேண்டுமானாலும் அணியலாம் ஆனால் ஐரோப்பியர்கள் போல் உடை அணியாதீர்கள் அது பிரச்சனைகளை உருவாக்கும்.. குறைவான ஆடைகளை அணிந்த பெண்கள் பிரச்சனைகளை உருவாக்குவார்கள், பெண்கள் அதிகளவிலான ஆடைகளை அணிந்தால் மக்கள் நிம்மதியாக இருப்பார்கள் என்று தெரிவித்துள்ளார். அமைச்சரின் இந்த கருத்துக்கு சமூக வலைதளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
ஆபரேஷன் கங்கா தொடர்பான ஆவணப்படம்.. இந்தியாவின் மன உறுதியை பிரதிபலிக்கும் என பிரதமர் மோடி பெருமிதம்