அவதூறு வழக்கு: ராகுல் காந்திக்கு இடைக்கால பாதுகாப்பு வழங்க முடியாது.. நோ சொன்ன உயர்நீதிமன்றம்.!
பிரதமர் மோடி பெயர் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் ராகுல் காந்திக்கு இடைக்கால பாதுகாப்பு வழங்க உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது.
பிரதமர் மோடி பெயர் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு சமீபத்தில் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, அவரது கேரளா மாநிலம் வயநாடு எம்பி பதவியும் பறிக்கப்பட்டது.
இந்த 2 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைக்க கோரிய ராகுல் காந்தியின் மனுவை சூரத் நீதிமன்றம் சமீபத்தில் தள்ளுபடி செய்தது. சூரத் அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், குஜராத் உயர்நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்திருந்தார். அதன்படி, அவதூறு வழக்கில் தண்டனையை எதிர்த்து ராகுல் காந்தி தொடர்ந்த மேல்முறையீட்டு மனு விசாரணை இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இதையும் படிங்க..மாதம் 1 லட்சம் வரை சம்பளம்.. டிஎன்பிஎஸ்சியில் அருமையான வேலைவாய்ப்பு - முழு விபரம்
இந்நிலையில், ராகுல் காந்தி தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அவதூறு வழக்கில் தண்டனைக்கு தடை கோரிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் மனு மீதான உத்தரவை குஜராத் உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. நீதிபதி ஹேமந்த் பிரச்சக் விடுமுறைக்கு பிறகு தீர்ப்பை அறிவிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டது. அதுவரை ராகுல் காந்திக்கு இடைக்கால நிவாரணம் வழங்க நீதிமன்றம் மறுத்துள்ளது.
உயர் நீதிமன்றத்தில், ராகுல் காந்தி சார்பில் அபிஷேக் சிங்வி வாதிட்டார். அப்போது அவர் ராகுல் காந்திக்கு அதிகபட்சமாக 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட குற்றம் தீவிரமானது அல்ல என்றுவாதிட்டார். வயநாடு மக்களவைத் தொகுதியில் நடைபெறக்கூடிய இடைத்தேர்தல் குறித்து சிங்வி கூறுகையில், “அரசு ஊழியர் அல்லது சட்டமன்ற உறுப்பினரைப் பொறுத்தவரை, இது ஒரு நபர், தொகுதி மற்றும் மறுதேர்தலின் கடுமையான விளைவுகளுக்கு மிகவும் கடுமையான கூடுதல் மாற்ற முடியாத விளைவுகளை ஏற்படுத்துகிறது.
"மோடிகள் அனைவரும் திருடர்கள் என்று நீங்கள் கூறும்போது, அது தார்மீகக் குழப்பம் இல்லையா ? என்ன செய்தியை உலகிற்குச் சொல்கிறீர்கள் ? இந்திய எதிர்க்கட்சித் தலைவர் ஒருவர் தனது பிரதமரை ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் திருடன் என்று முத்திரை குத்துகிறார் ? " புகார்தாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நிருபம் நானாவதி பதில் அளித்தார். ராகுல் காந்திக்கு இடைக்கால பாதுகாப்பு வழங்க உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது.
இதையும் படிங்க..IRCTC : இனி ஒருவருடைய ரயில் டிக்கெட்டில் யார் வேண்டுமானாலும் பயணிக்கலாம்.. முழு விபரம்
இதையும் படிங்க..இனி மாம்பழம் சாப்பிட மட்டும் கிடையாது மக்களே.!! விஞ்ஞானிகள் புது கண்டுபிடிப்பு - அசந்து போயிடுவீங்க.!