கேரளாவில் வெளுத்து வாங்கும் மழையால் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்; வைரல் வீடியோ!!
கேரளாவின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டி வரும் நிலையில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை நீர் காட்டாற்று வெள்ளம் போல் செல்கிறது.

கேரளாவின் பல்வேறு பகுதிகளில் மழை கொட்டி தீர்த்து வருகிறது. குறிப்பாக பாலக்காட்டில் இருக்கும் வடக்கன்சேரி, திருச்சூரில் இருக்கும் அரிபாலம், பத்தனம்திட்டாவில் இருக்கும் அடூர் மற்றும் ஆழப்புழா ஆகிய இடங்களில் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அதிரப்பள்ளி நீர் வீழ்ச்சியில் வெள்ளம் ஆர்ப்பரித்துக் கொட்டிக் கொண்டு இருக்கிறது.
கேரளாவின் ஆறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. எர்ணாகுளம், கோட்டயம், இடுக்கி, திருச்சூர், கண்ணூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் மரங்கள் சாய்ந்து, வீடுகள் இடிந்து, வெள்ளம் வடியாமல் மக்களுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
அமைச்சரோடு மாமன்னன் படம் பார்த்த திமுகவினர் ஓசியில் பாப்கார்ன் கேட்டு தகராறு; திரையரங்கில் அடிதடி
மழை தொடர்ந்து பெய்து வருவதால், பம்பை நதியில் வெள்ளம் அதிகரித்துள்ளது. கடலோர மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளன. இடுக்கி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்டும், கொல்லம் மாவட்டத்திற்கு மஞ்சள் அலர்ட்டும் விடப்பட்டுள்ளது.