மும்பை நகரில் பெய்து வரும் கடும் மழை காரணமாக விமானம் மற்றும் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. மஹாராஷ்டிரா, கோவா மாநிலங்களில் கடந்த சில நாட்களாகவே கனமழை கொட்டி வருகிறது. இன்றும் கனமழை பெய்துவருகிறது. 

இந்நிலையில் இன்று முதல் 12 ஆம் தேதி வரை மும்பை நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடுமையான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.  கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மழை பொழிவு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 மழை காரணமாக சாலைகளில் வெள்ளம் போல் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மோசமான வானிலை கரணமாக மும்பையில், 32 விமானங்கள் தாமதம் ஆகியுள்ளன. 3 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. ரயில் சேவையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 

தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் இருப்பதாகவும், நிலைமை கட்டுக்கடங்காமல் போகும் நிலையில் உதவி படை அனுப்பி வைக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.