Mulayam Singh Yadav: UP: முலாயம் சிங் உடல்நிலை கவலைக்கிடம்: குருகிராம் மருத்துவமனைக்கு மாற்றம்
உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதிக் கட்சித் தலைவருமான முலாயம் சிங் யாதவின்(வயது82) உடல்நிலை கவலைக்கிடமாகியுள்ளது. இதையடுத்து, குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனைக்கு நேற்று இரவு கொண்டு செல்லப்பட்டார்
உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதிக் கட்சித் தலைவருமான முலாயம் சிங் யாதவின்(வயது82) உடல்நிலை கவலைக்கிடமாகியுள்ளது. இதையடுத்து, குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனைக்கு நேற்று இரவு கொண்டு செல்லப்பட்டார்
ஆர்.எஸ்.எஸ். உடையில் ஊர்வலமாக சென்ற அமைச்சர்கள்; பொதுமக்கள் அதிர்ச்சி
முலாயம் சிங் உடல்நிலை மோசமடைந்ததையடுத்து, அவரின் மகன் அகிலேஷ் யாதவிடம், தந்தையின் உடல்நிலை குறித்து பிரதமர் மோடி, உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர்கேட்டறிந்தனர்.
அகிலேஷ் யாதவிடம் பேசிய பிரதமர் மோடி தேவையான அனைத்து மருத்துவ உதவிகளும், அரசு சார்பில் செய்யப்படும் என்று உறுதியளித்துள்ளார்.
உத்தரப்பிரதேச அரசு வெளியிட்ட தகவலில் “ உ.பி. முதல்வர் ஆதித்யநாத், முலாயம் சிங் சிகிச்சை பெற்றுவரும் மருத்துவமனை மருத்துவர்களைத் தொடர்பு கொண்டு அவரின் உடல்நிலை குறித்து விசாரித்தார்” எனத் தெரிவித்துள்ளது
உ.பி. துணை முதல்வர் பிரஜேஷ் பதக் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ உ.பி. முன்னாள் முதல்வர் முலாயம் சிங் உடல்நிலை குறித்த தகவல் அறிந்தோம். அவர் விரைவில் குணமடைந்து நீண்டகாலம் வாழ ராமரிடம் பிரார்த்திப்போம்” எனத் தெரிவித்தார்.
உ.பி. துணை முதல்வர் கேவவ் மவுரியா ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ மதிப்புக்குரிய நேதாஜி, ஐசியுவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரின் உடல்நிலை சீராக இருக்கிறது. தொண்டர்கள் யாரும் மருத்துவமனைக்கு வர வேண்டாம். நேதாஜியின் உடல்நிலை குறித்து அவ்வப்போது தகவல் தெரிவிப்போம்” எனத் தெரிவித்தார்.
இனி போன் வந்தா வந்தே மாதரம்-னு தான் சொல்லனும்... மகாராஷ்டிரா அரசு அதிரடி!!
முலாயம் சிங் யாதவின் உடல்நிலை நேற்று இரவு மோசமடைந்ததையடுத்து, குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதால், தொண்டர்கள் யாரும் மருத்துவமனைக்கு வர வேண்டாம் என்று சமாஜ்வாதிக் கட்சி கேட்டுக்கொண்டுள்ளது.
மருத்துவமனை வட்டராங்கள் கூறுகையில் “ முலாயம் சிங் யாதவின் நுரையீரம் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதால் மூச்சுவிடுவதில் சிரமப்படுகிறார். நுரையீரல் வல்லுநர்கள் மருத்துவர்கள் நிதின் சூத், சுஷில் கட்டாரியா இருவரும் அவரின் உடல்நிலையைக் கண்காணித்து வருகிறார்கள். ஆகஸ்ட் 22ம் தேதியிலிருந்து முலாயம் சிங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். ஜூலை மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாலும் விரைவில் குணமடைந்து முலாயம் வீடு திரும்பினார்”என்பது குறிப்பிடத்தக்கது.
உடல்நலக்குறைவால் முலாயம் சிங் மருத்துவமனையில் அனுமதி… பிரதமர் மோடி நலம் விசாரிப்பு!!
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ முலாயம் சிங் உடல்நிலை குறித்து அறிந்தேன். அவர் விரைவாக குணமடைய வாழ்த்துகிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.
பிரியங்கா காந்தி ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ முலாயம் சிங் உடல்நிலை மோசமடைந்து வருவதுதான் அனைவரின் கவலையாக இருக்கிறது, அவரின் உடல்நிலை விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறோம்” எனத் தெரிவித்தார்
- Akhilesh Yadav
- Former Uttar Pradesh chief minister mulam singh
- Gurugram
- Samajwadi Party
- Uttar Chief Minister Yogi Adityanath
- Uttar Pradesh
- age of mulayam singh yadav
- mulayam
- mulayam singh
- mulayam singh yadav
- mulayam singh yadav age
- mulayam singh yadav latest news
- mulayam singh yadav news
- Prime Minister Narendra Modi
- national news
- india news
- uttar pradesh news