இந்தியாவில் மக்களுக்கு கிடைக்கும் பல்வேறு மருத்துவ காப்பீட்டுத் திட்டங்கள் என்னென்ன? தெரியுமா உங்களுக்கு?

உலக நாடுகள் தங்களது மக்களுக்கு நல்ல தரமான மருத்துவ சேவையை வழங்குவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன. நாட்டின் சுகாதாரம்தான் ஒரு நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு இட்டுச் செல்லும். 

Health insurance schemes of central and state governments in India

இந்த நிலையில், சுகாதாரப் பிரச்சினைகள் பற்றிய விழிப்புணர்வை உருவாக்குதல், வலுவான உள்கட்டமைப்பை உறுதி செய்தல் மற்றும் சுகாதார காப்பீட்டை ஊக்குவித்தல் ஆகியவை மக்களின் நலனுக்காக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்திய அரசும் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஆர்வம் காட்டி வருகிறது. இந்தியாவில் கிடைக்கும் அரசு மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்கள் பற்றி பார்ப்போம்:

ஆயுஷ்மான் பாரத்:
தேசிய சுகாதாரக் கொள்கையின் பரிந்துரைகளின்படி இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்தது. ஆயுஷ்மான் பாரத் யோஜனா, யுனிவர்சல் ஹெல்த் திட்டத்தை மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் சுகாதார சேவைகள் பெரும்பாலும் பிரிக்கப்பட்டுள்ளன மற்றும் ஆயுஷ்மான் பாரத் அவற்றை விரிவானதாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்திய மக்களுக்கு தொடர்ந்து சுகாதார சேவை வழங்குவதற்காக கொண்டு வரப்பட்டுள்ளது.

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் சுகாதார மையங்கள் மற்றும் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா உள்ளன. மக்களுக்கு சிறந்த சுகாதாரத்தை உறுதி செய்வதற்காக நாடு முழுவதும் 1.50 லட்சம் சுகாதார மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. துணை மையங்கள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் சுகாதார மையங்களாக மாற்றப்பட்டுள்ளன. பிரதம மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா என்பது ஏழைகளுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டமாகும். இந்த திட்டம் ஆண்டுக்கு ரூ. 30 பிரீமியத்தில் ஒரு குடும்பத்திற்கு ஓராண்டுக அடிப்படையில் ரூ. 5 லட்சம் மருத்துவ காப்பீடு வழங்குகிறது. 

இந்தியாவில் அதிகரிக்கும் உறுப்பு தானம்: மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்!
ஆவாஸ் ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டம்:
இது புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான சுகாதார காப்பீடு ஆகும். இது கேரள அரசால் தொடங்கப்பட்டது. இது தொழிலாளர்களுக்கு விபத்தினால் ஏற்படும் இறப்புக்கான காப்பீட்டையும் வழங்குகிறது. இந்த திட்டம் 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது மற்றும் கேரளாவில் பணிபுரியும் 5 லட்சம் மாநிலங்களுக்கு இடையேயான புலம்பெயர்ந்த தொழிலாளர்களை இலக்காகக் கொண்டு துவங்கப்பட்டது. ஆவாஸ் ஹெல்த் இன்சூரன்ஸின் கீழ் ரூ.15000 காப்பீடாக வழங்கப்படுகிறது.  இறப்புக்கான காப்பீடாக ரூ.2 லட்சம் ஆக வழங்கப்படுகிறது.

இந்த பாலிசியை 18 முதல் 60 வயதுக்குட்பட்ட தொழிலாளர்கள் பெறலாம். அவர்களுக்கு ஆவாஸ் ஹெல்த் இன்சூரன்ஸ் கார்டு வழங்கப்படும். பயோமெட்ரிக் தகவல் மற்றும் பிற தகவல் சேகரிப்புக்குப்  பின்னர் பதிவுகளை துவக்கி சிகிச்சை பெறலாம்.

ஆம் ஆத்மி பீமா யோஜனா:

ஆம் ஆத்மி பீமா யோஜனா (ஏஏபிஒய்) என்பது தச்சு, மீன்பிடித்தல், கைத்தறி நெசவு போன்ற சில தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்களுக்கானது. இது போன்று 48 வரையறுக்கப்பட்ட தொழில்கள் உள்ளன. ஆண்டுக்கு ரூ.30000 காப்பீடு வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு பாலிசி சந்தா பிரீமியம் ரூ. 200 செலுத்த வேண்டும். இந்த திட்டத்தில் தகுதி பெறுவதற்கு ஒருவர் குடும்பத்தின் தலைவராக இருக்க வேண்டும் அல்லது வருமானம் பெறுபவராக இருக்க வேண்டும். அல்லது குறிப்பிடப்பட்ட 48 தொழில்களில் ஏதாவது ஒன்றை செய்ய வேண்டும்.

இந்தியாவில் 3,000க்கும் மேற்பட்ட ஃபின்டெக் ஸ்டார்ட்அப்கள் பதிவு.. மத்திய அரசு தகவல்

மத்திய அரசின் சுகாதாரத் திட்டம்:
இந்த திட்டம் மத்திய அரசால் தொடங்கப்பட்டது. மத்திய அரசு ஊழியர்கள் இந்த திட்டத்திற்கு தகுதியானவர்கள். உதாரணமாக, உச்ச நீதிமன்ற நீதிபதிகள், சில ரயில்வே வாரிய ஊழியர்கள். இந்த திட்டம் ஆறு ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இதுவரை 35 லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களை உள்ளடக்கியது.

இந்த திட்டத்தின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின்படி மருத்துவமனையில் சேர்த்தல் மற்றும் வீட்டு பராமரிப்பு ஆகியவையும் அடங்கும். மத்திய அரசின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் அலோபதி மற்றும் ஹோமியோபதியும் அடங்கும். இது 71 நகரங்களில் கிடைக்கிறது. மேலும் பல பகுதிகளுக்கு விரிவாக்க திட்டமிடப்பட்டு வருகிறது.

முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டம்:
இது மாநில அரசின் திட்டம். யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் உடன் இணைந்து இந்த திட்டம் தமிழ்நாடு அரசால் ஊக்குவிக்கப்படுகிறது. முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டம் தரமான சுகாதாரப் பாதுகாப்பிற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு குடும்ப திட்டமாகும்.

ஒருவர் மருத்துவமனையில் சேர்ந்தால் மருத்துவ செலவுகளுக்கு இந்த பாலிசியின் கீழ் ரூ. 5 லட்சம் வழங்கப்படும். இந்த திட்டத்தின் கீழ் சிகிச்சை பெறுவதற்கு சில அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் வசித்து ஆண்டுக்கு ரூ. 75000 வருமானம் பெறுபவர்கள் இந்த திட்டத்தில் பலனைப் பெற தகுதியானவர்கள். 

பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா:
இந்திய மக்களுக்கு விபத்து காப்பீடு வழங்குவதற்காக இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தது. 2016 ஆம் ஆண்டில், இந்தியக் குடிமக்களில் 20% பேர் மட்டுமே காப்பீட்டுத் தொகையைப் பெற்றுள்ளனர்.
18 முதல் 70 வயதுக்குட்பட்டவர்கள் மற்றும் வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்கள் இந்தத் திட்டத்தின் பலன்களைப் பெறலாம். இந்த பாலிசியில் பாதி ஊனமுற்றவர்களுக்கு ஆண்டுக்கு ரூ. 1 லட்சம் மற்றும் முழுவதும் ஊனம் அடைந்தோருக்கு ரூ. 2 லட்சம் காப்பீடு வழங்கப்படுகிறது. இதற்கான ஆண்டு பிரீமியம் ரூ. 12 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த பிரீமியம் தொகை நேரடியாக காப்பீடு பெறுபவர்களின் நேரடி வங்கிக் கணக்கில் இருந்து பிடித்தம் செய்யப்படும். 

ராஷ்ட்ரிய ஸ்வஸ்திய பீமா யோஜனா:
இத்திட்டம் அமைப்புசாரா தொழிலாளர்களுக்காக கொண்டு வரப்பட்டது. பெரும்பாலும், அவர்கள் எந்த காப்பீட்டு திட்டத்தின் கீழும் வருவதில்லை. இவர்கள் தங்களது வங்கிக் கணக்கில் சேமிப்பு இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. இந்த சூழலில் இவர்களுக்கு இந்த காப்பீடு உதவுகிறது. ராஷ்ட்ரிய ஸ்வஸ்திய பீமா யோஜனா இந்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தால் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் அமைப்புசாரா மற்றும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள தனிநபர் தொழிலாளர்கள் பயன் பெறலாம். குடும்ப உறுப்பினர்களும் இந்த திட்டத்தின் கீழ் பயன் பெறலாம். ஒரு குடும்பத்தில் ஐந்து உறுப்பினர்கள் சிகிச்சை பெறலாம். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios