உலகெங்கிலும் வாழும் இந்துக்களால் மிகவும் உற்சாகத்துடன் கொண்டாடப்படும் பண்டிகைகளில் முக்கியமானது விநாயகர் சதுர்த்தி. முழுமுதற்கடவுள்  கடவுளும், ஈசனின் மகனுமான விநாயகர் அவதரித்த தினமான விநாயகர் சதுர்த்தி. 

இந்த விழாவானது ஒவ்வொரு வருடமும் ஆவணி மாதத்தின் வளர்பிறை சதுர்த்தி நாள் அன்று கொண்டாடப்படுகிறது.விநாயகர் சதுர்த்தியையொட்டி மும்பை பகுதியில் இந்த விழாவை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.பக்தர்கள் ஆங்காங்கே நிறுவப்பட்ட சிலைகள் அனைத்தும் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன. விநாயகர் சிலை மட்டுமல்லாது சிவன், விஷ்ணு, பிரம்மா சிலைகளும் வைக்கப்பட்டிருந்தன.

தற்காலிகமாக நிறுவப்பட்ட இந்த விநாயகர் சிலைகள் அனைத்தும், மும்பை தாதர் சவுபதி கடற்பகுதியில் கரைக்க நேற்று எடுத்துச் செல்லப்பட்டது. லாரிகளிலும், வேன்களிலும், விநாயகர் சிலைகளை தலையில் சுமந்தபடியும் கடற்பகுதி சென்றனர்.

மிகப் பெரிய விநாயகர் சிலைகள், க்ரேன் உதவியுடன் கடலில் கரைக்கப்பட்டது. சிறிய சிலைகளை பக்தர்களே கடலில் கரைத்தனர். விநாயகர் சிலைகள் கரைக்கப்படும் அந்த நேரத்தில் காகங்கள் வரிசையாக நின்றிருந்தது. எதற்காக என்றால், தமக்கு ஏதும் ஆகாரம் கிடைக்காதா என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தது. காகங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருப்பதை நீங்களே பாருங்கள்.