Asianet News TamilAsianet News Tamil

harthal in kerala:கேரள-வில் பிஎப்ஐ நடத்தும் ஹர்தாலில் பயங்கர வன்முறை: பலர் காயம்: பேருந்து மீது கல்வீச்சு

கேரளாவில் பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு சார்பில் இன்று நடந்த கடையடைப்பு போராட்டத்தில் கடும் வன்முறை ஏற்பட்டது. பேருந்துகள் மீது கற்கள் வீசி கண்ணாடி உடைக்கப்பட்டன, கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன, ஏராளமானோர் காயமடைந்தனர்.

harthal in kerala: pfi organised Harthal becomes violent in Kerala
Author
First Published Sep 23, 2022, 1:46 PM IST

கேரளாவில் பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு சார்பில் இன்று நடந்த கடையடைப்பு போராட்டத்தில் கடும் வன்முறை ஏற்பட்டது. பேருந்துகள் மீது கற்கள் வீசி கண்ணாடி உடைக்கப்பட்டன, கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன, ஏராளமானோர் காயமடைந்தனர்.

கேரளாவில் பிஎப்ஐ அமைப்பின் தேசிய, மாநில, மாவட்ட அளவிலான முக்கியத் தலைவர்களை என்ஐஏ அமைப்பினர் கைதுசெய்து விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். பிஎப்ஐ மாநிலத் தலைவர் சிபி முகமது பசீர், தேசியத் தலைவர் ஓஎம்ஏ சலாம்,தேசிய செயலாளர் நஸ்ருதீன் இளமாறம் ஆகியோர் என்ஐஏ பாதுகாப்பில் உள்ளனர். 

நமது சூழியலை காப்பது குறித்து இளைஞர்களுக்கு கற்பிப்பது அவசியம்: பிரதமர் மோடி அறிவுறுத்தல்

harthal in kerala: pfi organised Harthal becomes violent in Kerala

இந்நிலையில் என்ஐஏ நடத்திய சோதனையைக் கண்டித்தும், எதிர்ப்புக் குரல்களை மத்திய அரசு அரசு விசாணை அமைப்புகள் மூலம் அடக்க முயல்வதைக் கண்டித்தும் பிஎப்ஐ அமைப்பு சார்பில் இன்று கேரளாவில் ஒருநாள் கடையடைப்பு போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டது. இதன்படி காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை ஹர்தால் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டது.

பிஎப்ஐ ஹர்தாலுக்கு எதிராக கேரள உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு

கேரளாவில் காலை ஹர்தால் தொடங்கியதிலிருந்து பல்வேறு இடங்களில் அரசு பேருந்துகள் மீது கற்கள் வீசி தாக்கப்பட்டு கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. திருவனந்தபுரம், கொல்லம், பத்தினம்திட்டா, ஆலப்புழா, எர்ணாகுளம், கோழிக்கோடு, வயநாடு மாவட்டங்களில் கேரள அரசு பேருந்து மீது கற்கள் வீசிப்பட்டன.

கோழிக்கோடு நகரில் பேருந்து மீது கற்கள் வீசப்பட்டதில், பேருந்து ஓட்டுநர் காயமடைந்தார். இதையடுத்து, அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். திருவனந்தபுரத்தில் கட்டக்கடாவில் பேருந்துகளை போராட்டக்கார்ரகள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

harthal in kerala: pfi organised Harthal becomes violent in Kerala

கோழிக்கோடு மாவட்டத்தில் அரசு பேருந்து சேவை நிறுத்தப்பட்டது. கொச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் தனியார் பேருந்து சேவையும் நிறுத்தப்பட்டது.

கொன்னி பகுதியில் குளத்துன்னல் பகுதியில் அரசுப் பேருந்து மீது போராட்டக் காரர்கள் கல்வீசித் தாக்கியதில் பதிவாளர் அலுவலகத்தின் மூத்த கிளாக் காயமடைந்தார்.

மகிந்திரா நிதி நிறுவனம் ஏஜென்டுகள் மூலம் கடனை வசூலிக்கத் தடை: ஆர்பிஐ அதிரடி

கோழிக்கோடு பகுதியில் செருவானூர் ஸ்டீல் பிளான்ட் அருகே அரசு பேருந்து மீது கல்வீசப்பட்டதில் ஓட்டுநர் சிஜி காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

திருவனந்தபுரம் பொத்தன்கோடு பகுதியில் 15க்கும் மேற்பட்ட ஒரு கும்பல் கடையை சேதப்படுத்தி சென்றனர். இதில் ஒருவரை மட்டும் போலீஸார் கைதுசெய்துள்ளனர். கொல்லம் பள்ளிமுக்கு பகுதியில் பேருந்து மீது கல்வீசப்பட்டதில் கண்ணாடி நொறுங்கியது. இதையடுத்து சாலை ஓரமாக பேருந்தை நிறுத்திவிட்டு ஓட்டுநர் தப்பினார்.

harthal in kerala: pfi organised Harthal becomes violent in Kerala

கொச்சி குருமாலூர் பகுதியில் அரசுப் பேருந்து மீது கல்வீசப்பட்டது. ஆலுவா-பரவூர் சாலையில் பேருந்து மீது கல்வீசப்பட்டதில் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அரசுப் பேருந்துகள் மீது கல்வீச்சு தொடர்ந்து நடப்பதால், போலீஸ் பாதுகாப்புடன் சில இடங்களில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

கேரள பல்கலைக்கழகம், எம்ஜி பல்கலைக்கழகம், கண்ணூர் பல்கலைக்கழகத்தில் இன்று நடக்க இருந்த தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டன. பிஎட் கவுன்சிலிங், இடஒதுக்கீட்டை வரும் 25ம் தேதிக்கு கேரள பல்கலைக்கழகம் ஒத்தி வைத்தது.

பணமதிப்பிழப்பின் விளைவுகளைத் தெரிந்தே மோடி அமல்படுத்தினார்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

கேரளாவில் பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு சார்பில் இன்று நடத்தப்படும் கடையடைப்பு போராட்டத்துக்கு(ஹர்தால்) எதிராக கேரள உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்காக எடுத்துள்ளது.

harthal in kerala: pfi organised Harthal becomes violent in Kerala

 கேரள உயர் நீதிமன்றம் கூறுகையில் “ பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் நடத்தப்படும் ஹர்தால் போராட்டத்தில் பல இடங்களில் வன்முறை நடக்கிறது, அரசு சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தப்படுகிறது. ஹர்தால் நடத்துவது முன்பே தடை செய்யப்பட்டுள்ளது. ஹர்தால் நடத்துவதற்கு முன்பாக நீதிமன்றத்தில் அனுமதிப பெற வேண்டும். ஹர்தாலில் வன்முறை ஏற்படுவதையும், பொதுச் சொத்துக்களை சேதப்படுத்துவதை ஏற்க முடியாது. 

கேரளாவில் பிஎப்ஐ சார்பில் இன்று ஹர்தால்:பஸ்கள் மீது கல்வீச்சு: போஸீலார் எச்சரிக்கை

harthal in kerala: pfi organised Harthal becomes violent in Kerala

ஹர்தால் நடத்துவதை உயர் நீதிமன்றம் தடை செய்துள்ள நிலையில் நீதிமன்ற உத்தரவை மீறுபவர்கள் மீது மாநில அரசு கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து விதமான சாத்தியக்கூறுகளையும் பயன்படுத்தி, வன்முறை எந்த வடிவில் வந்தாலும் அதை மாநிலஅரசு தடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios