இங்கிலாந்திடம் கெடுபிடி காட்டும் பிரதமர் மோடி: ஹரிஷ் சால்வே உடைத்த ரகசியம்!
விஜய் மல்லையா, நிரவ் மோடி ஆகியோரை நாடு கடத்துவதில் பிரதமர் மோடி திட்டவட்டமாக இருப்பதாக மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே தெரிவித்துள்ளார்

பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாட்டுப் பயணம் குறித்து மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே அண்மையில் அளித்த பேட்டியில், விஜய் மல்லையா, நிரவ் மோடி ஆகியோரை நாடு கடத்துவதில் பிரதமர் மோடி திட்டவட்டமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். இந்தியா-இங்கிலாந்து வர்த்தகம் தொடர்பான ஒவ்வொரு கூட்டத்திலும் தப்பியோடிய விஜய் மல்லையா மற்றும் நிரவ் மோடியை நாடு கடத்துவது குறித்து பிரதமர் மோடி எடுத்துரைப்பதாக ஹரிஷ் சால்வே அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இந்தியா - இங்கிலாந்து இடையேயான சந்திப்பின்போது, பிரதமர் மோடி கேட்கும் முதல் கேள்வி, விஜய் மல்லையாவும், நிரவ் மோடியும் எங்கே? என்பதுதான் என சுட்டிக்காட்டிய ஹரிஷ் சால்வே, “ஒரே நேரத்தில் வர்த்தக பங்காளியாகவும் தப்பியோடியவர்களின் இல்லமாகவும் இங்கிலாந்து இருக்க முடியாது” என பிரதமர் மோடி இங்கிலாந்து அரசிடம் பகிரங்கமாக தெரிவித்துள்ளதாகவும் ஹரிஷ் சால்வே கூறியுள்ளார்.
மேலும், விஜய் மல்லையா, நிரவ் மோடி ஆகியோரை நாடு கடத்துவது தொடர்பான பிரச்சினை நிலுவையில் உள்ளதால் இங்கிலாந்து அரசு. இந்திய தரப்பிலிருந்து பெரும் அழுத்தத்தை எதிர்கொள்வதாகவும் ஹரிஷ் சால்வே தெரிவித்துள்ளார்.
குஜராத்தை சேர்ந்த வைர நகை வியாபாரி நிரவ் மோடி மீது, 11 ஆயிரத்து 600 கோடிக்கும் அதிகமாக சட்டவிரோத பரிவர்த்தனையும், ரூ.280 கோடி மோசடி செய்ததாகவும் பஞ்சாப் நேஷனல் வங்கி புகார் அளித்தது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்து தம்பதிக்கு கோயிலில் திருமணம் செய்து வைத்த முஸ்லீம் லீக் - இதுவும் கேரளா ஸ்டோரி தான்!
ஆனால், நிரவ் மோடி கடந்த 2018ஆம் ஆண்டே நாட்டி விட்டு வெளியேறி விட்டார். தொடர்ந்து, அவரை தேடப்படும் குற்றவாளிகளாக மத்திய அரசு அறிவித்துள்ளது. தற்போது இங்கிலாந்து சிறையில் இருக்கும் அவரை இந்தியாவுக்கு நாடு கடத்தும் முயற்சியில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
அதேபோல், இந்தியாவை சேர்ந்த மற்றொரு தொழிலதிபரான விஜய் மல்லையாவும் இங்கிலாந்தில் உள்ளார். அவரை இந்தியாவுக்கு நாடு கடத்தும் முயற்சியிலும் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.