தூக்கிலிடுவோம்... எரித்துவிடுவோம்... முஸ்லீம் லீக் பேரணியில் இந்து எதிர்ப்பு முழக்கங்கள்... பாஜக குற்றச்சாட்டு
கேரள அரசு ஆதரவளிக்காமல் இருந்திருந்தால் முஸ்லீம் லீக் பேரணியில் கலந்துகொண்டவர்கள் இவ்வளவு தூரம் செல்லத் துணிந்திருக்க மாட்டார்கள் என்று பாஜக குற்றம்சாட்டுகிறது.
கேரளாவில் மணிப்பூர் சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த நடந்த பேரணியில், முஸ்லிம் லீக் உறுப்பினர்கள் 'இந்து எதிர்ப்பு' முழக்கங்களை எழுப்பியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து பாஜக ஐடி பிரிவு பொறுப்பாளர் அமித் மாளவியா ட்வீட் செய்துள்ளார்.
காங்கிரஸின் கூட்டணிக் கட்சியான இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கைச் சேர்ந்தவர்கள், இந்துக்களை கோவில்களுக்கு முன்னால் தூக்கிலிட வேண்டும் என்றும் உயிருடன் எரிக்க வேண்டும் என்றும் அச்சுறுத்தும் முழக்கங்களை எழுப்புவதாக மாளவியா குற்றம்சாட்டியுள்ளார்.
"காங்கிரஸின் கூட்டணிக் கட்சியான இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் இளைஞர் பிரிவினர் கேரளாவின் காசர்கோட்டில் பேரணி நடத்தி, இந்துக்களுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர், அவர்களை (இந்துக்களை) கோயில்களுக்கு முன்பாக தூக்கிலிடுவோம், உயிருடன் எரித்துவிடுவோம் என்று மிரட்டினர்” என மாளவியா கூறியுள்ளார்.
தனது ட்விட்டர் பதிவில் பேரணியின் வீடியோ ஒன்றையும் இணைத்துள்ளார். ஆனால், அந்த வீடியோவின் நம்பகத்தன்மையை இன்னும் உறுதிபடுத்தப்படவில்லை. முஸ்லீம் லீக் நடத்திய இந்த பேரணிக்கு கேரளாவில் ஆளும் பினராயி விஜயன் தலைமையிலான கம்யூனிஸ்ட் அரசு ஆதரவு கொடுப்பதாகவும் அவர் குறை கூறியிருக்கிறார்.
"பினராயி அரசு ஆதரவளிக்காமல் இருந்திருந்தால் அவர்கள் இவ்வளவு தூரம் செல்லத் துணிந்திருக்க மாட்டார்கள். கேரளாவில் இப்போது இந்துக்களும், கிறிஸ்தவர்களும் பாதுகாப்பாக இருக்கிறார்களா? கொஞ்ச காலத்திற்கு முன்பு, மற்றொரு பேரணியில், 7 வயது சிறுவன், தனது தந்தையின் தோளில் அமர்ந்து, இந்துக்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் தங்கள் இறுதிச் சடங்குக்கு அரிசி, பூ, கற்பூரம் ஆகியவற்றை தயார் செய்து வைக்குமாறு கோஷம் எழுப்பினான்" என்றும் அமித் மாளவியா குறிப்பிட்டுள்ளார்.
கேரளாவின் கன்ஹாங்காட்டில் நடந்த மணிப்பூர் வைரல் வீடியோ வழக்குக்கு எதிரான போராட்டத்தின் போது இந்த சம்பவம் நடந்தாக உள்ளூர் ஊடகங்கள் மூலம் அறியமுடிகிறது. 300 இளைஞர்கள் இருவேறு குழுக்களுக்கு இடையே பகைமையை தூண்டும் வகையில் முழக்கங்கள் எழுப்பியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர் எனவும் அவர்களில் சிலர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் 153 A பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும் பிடிஐ செய்தி நிறுவனம் கூறுகிறது.
சவுதி அரச குடும்பத்தின் ஆடம்பரமான வாழ்க்கை! அரண்மணைக்குள் என்னவெல்லாம் நடக்குது பாருங்க!