hamban thatta harbour given to china by srilanga

இலங்கையில் தென் பகுதியில் உள்ள ஹம்பன்தோட்டா துறைமுகம் 99 ஆண்டுகளுக்கு சீன அரசிடம் முறைப்படி ேநற்று ஒப்படைக்கப்பட்டது.

இதன் மூலம், இந்தியப் பெருங்கடல் பகுதிக்குள் முதல் முறையாக சீனா தடம் பதித்து தனது நிலையை வலுப்படுத்த தொடங்கி இருக்கிறது. சீனாவை இலங்கைக்குள் நுழையவிடாமல் இந்திய அரசும், பிரதமர் மோடியும் பல ராஜதந்திர நடவடிக்ைக எடுத்தும் அது பயனளிக்வில்லை.

இது குறித்து அதிகாரிகள் தரப்பில் கூறப்படுவதாவது-

சீனாவைச் சேர்ந்த சீனா மெர்ச்ன்ட் போர்ட் ஹோல்டிங் கம்பெனி(சி.எம்.போர்ட்) ஹம்பன்தோட்டா சர்வதேச துறைமுக குழுமம், ஹம்பன்தோட்டா சர்வதேச துறைமுக சேவை ஆகியவற்றை நிர்வகித்து வந்தது. இருந்தபோதிலும், இலங்கை துறைமுக ஆணையமே துறைமுக சொந்தமாக வைத்திருக்கும். துறைமுகத்தைச் சுற்றி ஏராளமான முதலீட்டு மண்டலங்கள் உள்ளன எனத் தெரிவித்தார்.

பயணம்

கடந்த ஏப்ரல் மாதம் சீனாவுக்கு பயணம் மேற்கொண்ட இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, சீன கட்டுமான திட்டங்களின் பங்குகளை தமாற்ற ஒப்புக்கொண்டார். முன்னாள் அதிபர் ராஜபக்சே தனது சொந்த மாவட்டத்தில் இந்த திட்டங்களை தொடங்கி இருந்தார்.

வளர்ச்சி பெறும்

இந்த துறைமுகத்தை 99 ஆண்டுகள் குத்தகைக்கு முறைப்படி ஒப்படைக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

அதில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே பேசுகையில், “ சீனாவிடம் இருந்து பெற்ற ரூ.51 ஆயிரத்து 584 கோடி(800 கோடி டாலர்) கடன் பெற்று இருந்தோம். அதை மெல்ல திருப்பிச் செலுத்த தொடங்கிவிட்டோம்.

இந்தியப் பெருங்கடலில் ஹம்பன்தோட்டா துறைமுகம் மிகப்பெரிதாக வளர்ச்சி பெறும். இந்த பகுதியில் பொருளாதார மண்டலமாகவும், தொழில்துறை மண்டலமாகவும் மாறி, பொருளாதார வளர்ச்சிக்கும், சுற்றுலா வளர்ச்சிக்கும் உதவும்’’ எனத் தெரிவித்தார்.