இந்தியா நடத்தும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை குறி வைத்து காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் குர்பத்வந்த் சிங் பண்ணுன் மிரட்டல் விடுத்த ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

காலிஸ்தான் பிரிவினைவாத தலைவரான குர்பத்வந்த் சிங் பண்ணுன் உலகக் கோப்பையை குறித்து வைத்து பகிரங்கமாக மிரட்டல் விடுத்த ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த ஆடியோவில் வரும் 5 ஆம் தேதி இந்தியாவில் அகமதாபாத் மைதானத்தில் நடக்க உள்ள முதல் போட்டியின் போது தாக்குதல் ஏற்படுத்தப் போவதாகவும், இது உலகக் கோப்பை அல்ல, இது உலகக் பயங்கரவாத கோப்பை என்று மிரட்டல் விடுத்துள்ளார்.

ODI World Cup Warm Up Match Schedule 2023: ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை வார்ம் அப் போட்டி அட்டவணை வெளியீடு!

ஏற்கனவே கடந்த சில தினங்களுக்கு முன்பு, கனடாவில் உள்ள இந்துக்கள் அனைவரும் அந்நாட்டை விட்டு வெளியேறி, இந்தியாவுக்குச் செல்லுங்கள் என்று கனடாவில் உள்ள காலிஸ்தான் பிரிவினைவாதத் தலைவர் குர்பத்வந்த் சிங் பண்ணு பகிரங்க மிரட்டல் விடுத்திருக்கிறார். சீக்கியர்களுக்கான நீதி (SFJ) என்ற காலிஸ்தான் சார்பு அமைப்பின் சட்ட ஆலோசகர் குர்பத்வந்த் சிங் பண்ணுன் கனடாவில் வசிக்கும் இந்துக்களை அச்சுறுத்தி, விரைவில் நாட்டை விட்டு வெளியேறுமாறு கூறியிருக்கிறார்.

IND vs AUS, 3rd ODI: 3ஆவது ஒரு நாள் போட்டி, இந்தியா ஜெயிக்க அதிக வாய்ப்பு உண்டு!

SFJ இன் சட்ட ஆலோசகர் குர்பத்வந்த் சிங் பண்ணுன் ட்விட்டரில் வெளியிட்டிருக்கும் வீடியோவில், “இந்திய-இந்துக்கள் கனடாவை விட்டு வெளியேறுங்கள்; இந்தியாவுக்குப் போய்விடுங்கள். நீங்கள் இந்தியாவை ஆதரிப்பது மட்டுமல்லாமல், காலிஸ்தான் சார்பு சீக்கியர்களின் பேச்சு மற்றும் வெளிப்பாட்டை அடக்குவதையும் ஆதரிக்கிறீர்கள்" என்று பேசியிருக்கிறார்.

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்தியாவை தொடர்புபடுத்திப் பேசியதை அடுத்து, இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையே இருதரப்பு உறவில் உரசல்கள் அதிகரித்து வருகின்றன. சமீபத்தில் ஜி20 மாநாட்டிற்காக இந்தியா வந்திருந்தபோது ஜஸ்டின் ட்ரூடோ இதுபற்றி பிரதமரிடம் பேசியிருக்கிறார்.

ஜோஷிமத்தில் 65 சதவீத வீடுகள் பாதிப்பு: அறிக்கையில் அதிர்ச்சி தகவல்!

இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு கனடா பிரதமரின் பேச்சைத் தொடர்ந்து அந்நாட்டு அரசு இந்தியாவின் தூதரக அதிகாரி ஒருவரை தங்கள் நாட்டிலிருந்து வெளியேற்றிவிட்டது. இதனைக் இந்திய வெளியுறவுத்துறை கண்டித்ததுடன், ஜஸ்டின் ட்ரூடோவின் குற்றச்சாட்டை நிராகரித்தது. மேலும், பதில் நடவடிக்கையாக கனடாவின் தூதரக அதிகாரி ஒருவரையும் இந்தியாவில் இருந்து 5 நாட்களுக்குள் வெளியேறுமாறு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தான் குர்பத்வந்த் சிங் பண்ணுன் உலகக் கோப்பை முதல் போட்டியை குறி வைத்து தாக்குதல் நடத்தப் போவதாக பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளார்.

எனது பெயரில் எனக்கு வீடு இல்லை; நாட்டில் எனது மகள்களின் பெயரில் வீடு கொடுப்பதற்கு உழைக்கிறேன்; பிரதமர் மோடி!!

Scroll to load tweet…