GST introducing meeting at parliment

நாடு முழுவதும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட, ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி முறை, நள்ளிரவு அறிமுக கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற்று வரும் இந்த விழாவில், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, குடியரசுத் துணைத் தலைவர் ஹமீது அன்சாரி, பிரதமர் நரேந்திர மோடி , நாடாளுமன்ற சபாநாயகர் சுமித்ரா மஹாஜன், அமித் ஷா, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

விழாவை தொடங்கி வைத்து பேசிய மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, ஒரே இந்தியா, ஒரே வரி என்ற நடைமுறைக்கு இந்தியா மாறுகிறது என தெரிவித்தார். நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களும் ஜிஎஸ்டியை நடைமுறைப்படுத்த பெருமளவு ஒத்துழைப்பு அளித்ததாக அவர் கூறினார்.

ஒருமித்த கருத்தின் அடிப்படையிலேயே ஜிஎஸ்டி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த அருண் ஜெட்லி, ஏழை மக்கள் பாதிக்கப்படாத வகையில் வரிகள் விதிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

ஜிஎஸ்டி மூலம் மறைமுக வரிவிதிப்பு என்பது முடிவுக்கு வரும் என்றும் நள்ளிரவில் இந்தியாவின் சீர்திருத்தம் அமலுக்கு வருகிறது என்றும் அருண் ஜெட்லி தெரிவித்தார்.