Asianet News TamilAsianet News Tamil

தோல்வியில் முடிந்த ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் - மீண்டும் 11-ந்தேதி கூடுகிறது

gst counclil-meeting-failed
Author
First Published Dec 4, 2016, 10:39 AM IST


புதுடெல்லியில் கடந்த இரு நாட்களாக நடந்த ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் மாநிலங்கள், மத்திய அரசுக்கு இடையே ஒரு சில முக்கிய விஷயங்களில் கருத்து ஒற்றுமை ஏற்படவில்லை. இதனால், எந்த முக்கிய முடிவும் ஏற்படாமல் கூட்டம் தோல்வியில் முடிந்தது.

ஜி.எஸ்.டி.கவுன்சில்

நாடுமுழுவதும் ஒரே சீரான வரிவிதிப்பு முறையான சரக்கு மற்றும் சேவை வரியை(ஜி.எஸ்.டி.) அடுத்த ஆண்டு ஏப்ரல் 1-ந்தேதி முதல் நடைமுறைப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

gst counclil-meeting-failed

வரிவருவாயை மாநிலங்களுக்கு  இடையே பகிர்ந்து அளிப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்க நிதியமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் ஜி.எஸ்.டி. கவுன்சில் அமைக்கப்பட்டது. இதில் மாநில அரசுகள் சார்பில் அனைத்து நிதியமைச்சர்களும் இடம் பெற்றனர்.

5-வது கூட்டம்

இந்த கவுன்சிலின் 5-வது கூட்டம் கடந்த  இரு நாட்களாக புதுடெல்லியில் நடந்தது. இந்த கூட்டத்தின் முடிவில் மாநிலங்களுக்கும், மத்திய அரசுக்கும் இடையே ஒரு சில விஷயங்களில் கருத்தொற்றுமை ஏற்படவில்லை.

இழுபறி

குறிப்பாக, வரிசெலுத்துவோரில் எந்த பிரிவினை மாநில அரசு கட்டுப்படுத்துவது, எந்த பிரிவினரை மத்தியஅரசு கட்டுப்படுத்து என்பதில் முரண்பாடு நிலவியது. மேலும், மாநிலங்களான இழப்பீட்டுச்சட்டம் உருவாக்குவதில் கருத்து மோதல். மேலும், ஒருங்கிணைக்கப்பட்ட ஜி.எஸ்.டி., மத்திய ஜி.எஸ்.டி. மற்றும் மாநில ஜி.எஸ்.டி. வரை மசோதாவுக்கும் ஆதரவு அளிப்பதில் இழுபறி நீடித்தது.

இந்த கூட்டம் முடிந்த பின் நிதியமைச்சர் அருண்ஜெட்லி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது-

கவலை

ஜி.எஸ்.டி. வரி குறித்த விசயத்தில் இன்னும் மாநிலங்கள், மத்திய அரசுக்கு இடையே தீர்மானமான முடிவுக்கு வரவில்லை. இது கவலையளிக்கிறது.  ஆனாம், வரும் 11 மற்றும் 12 ந்தேதி நடக்கும் அடுத்த கூட்டத்தில் நிச்சயம் கருத்து ஒற்றுமை ஏற்படும் என நம்புகிறேன். குறிப்பாக முக்கிய விசயங்களான வரிசெலுத்தும் பிரிவினரை பகிர்வது, உள்ளிட்டவைகளில் ஆலோசிக்கப்பட வேண்டும்.

அரசியல் சிக்கல்

ஜி.எஸ்.டி. சட்டம் நிறைவேறிவிட்டதால், அடுத்த ஆண்டு செப்டம்பர் 16-ந் தேதிக்கு பின், நடைமுறைக்கு கொண்டு வராமல் தாமதம் செய்ய முடியாது. அப்படி தாமதம் செய்தால் அரசியல்சட்ட நெருக்கடி உண்டாகி, வரிவருவாய் இல்லாமல் போய்விடும்.

ஜி.எஸ்.டி. சட்டத்தில் 9 பகுதிகள் விவாதிக்கப்பட்டு மாநிலங்களுக்கு இடையே ஒப்புதல் பெறப்பட்டு வருகிறது. இந்த சட்டங்களில் கருத்து ஒற்றுமை உண்டாக்க முயற்சித்து வருகிறோம். ஜி.எஸ்.டி. இழப்பீட்டுச்சட்டம், ஒருங்கிணைக்கப்பட்ட ஜி.எஸ்.டி. ஆகியவை குறித்து வரும் 11,12ந்தேதி நடக்கும் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும். வரிசெலுத்தும் நபர்களை பகிர்வது கொள்வது மட்டும் சிக்கல்  நீடித்து வருகிறது'' என்று தெரிவித்தார்.

 

கருத்து ஒற்றுமை இல்லை

கேரள மாநில நிதியமைச்சர் தாமஸ் ஐசாக் கூறுகையில், “ ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் கருத்தொற்றுமை ஏற்படவில்லை. வரிசெலுத்தும் பிரிவினரை பிரிப்பதில் தொடர்ந்து இழுபறி நீடிப்பதால், கூட்டம் முழுமை அடையவில்லை. மாநிலங்களுக்கான இழப்பீட்டுச்சட்டமும் பேசப்படவில்லை. அடுத்த கூட்டத்தில் பேசப்படும்'' எனத் தெரிவித்தார்.

 

இருபுறமும் கட்டுப்படுத்த முடியாது

மேற்கு வங்காளத்தின் நிதியமைச்சர் அமித் மித்ரா கூறுகையில், “ இரு பக்கமும் கட்டுப்படுத்த முடியாது என்பதில் நாங்கள் தீவிரமாக இருக்கிறோம். மாநில அரசுகளைப் பொறுத்தவரே ஆண்டுக்கு ரூ.1.5 கோடி வருவாய் வரம்புக்குள் இருப்போர் மாநிலஅரசு கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும் என்று தெரிவித்துள்ளோம். அப்படி இருந்தால், மாநிலத்தில் ஏழைகளின் நலனைக் காக்க முடியும்'' என்றார்.

Follow Us:
Download App:
  • android
  • ios