ISRO GSLV-F12 mission: சற்றுமுன் விண்ணில் பாய்ந்த ஜிஎஸ்எல்வி எப்12!! இனி பேரிடர் காலங்களில் கவலையே இல்லை!!

ஜிஎஸ்எல்வி எப்12 ராக்கெட் இன்று (மே.29) காலை 10.42 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.  

GSLV lifts off carrying navigation satellite NVS-01 from Sriharikota

ஆந்திர மாநிலம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையம் (ISRO) ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருக்கும் 2ஆவது ஏவுதளத்தில் இருந்து 'ஜிஎஸ்எல்வி எப்12' (GSLV F12) என்ற ராக்கெட், வழிகாட்டி செயற்கைக்கோளான என்விஎஸ்-01யை சுமந்து கொண்டு சற்று முன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.

இந்த ராக்கெட்டில் பேரிடர் தொடர்பான தகவல்களை தரும் வகையில் தொழில்நுட்பங்கள் பொருத்தப்பட்டுள்ளன. வருங்காலத்தில் இன்னும் உதவியாக இருக்கும் என  இஸ்ரோ நம்பிக்கை தெரிவித்துள்ளது. ஏறக்குறைய 20 நிமிடங்களுக்குப் பிறகு, ஜிஎஸ்எல்வி ராக்கெட் செயற்கைக்கோளை சுமார் 251 கிமீ உயரத்தில் ஜியோசின்க்ரோனஸ் டிரான்ஸ்ஃபர் ஆர்பிட்டில் (ஜிடிஓ) நிலைநிறுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. குறிப்பாக உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட அணு கடிகாரமும் இந்த செயற்கைக் கோளில் பொருத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

ஜிஎஸ்எல்வி எப்12 ராக்கெட் சுமார் 51.7 மீட்டர் உயரம் கொண்டது. மொத்தமாக 420 டன் உந்துவிசை எடை உடையது. ஜிஎஸ்எல்வி வரிசையில் தற்போது ஏவப்படவுள்ள ராக்கெட்15ஆவதாக செலுத்தப்படும் ராக்கெட் ஆகும். இதனுடன் 2 ஆயிரத்து 232 கிலோ எடையுள்ள 'என்விஎஸ்-01' எனும் வழிகாட்டி செயற்கைகோளும் பூமி சுற்றுப்பாதையில் 36 ஆயிரம் கி.மீ உயரத்தில் நிலைநிறுத்தப்படும். இன்றைக்கு விண்ணில் செலுத்தப்பட்ட ஜிஎஸ்எல்வி எப்12, செயற்கைக்கோள் பிற செயற்கைக்கோள்களுடன் சேர்ந்து தரை வழி போக்குவரத்து, கடல் வழி போக்குவரத்து, வான்வெளி வழி போக்குவரத்தைக் கண்காணிக்கும் என சொல்லப்படுள்ளது. 

இதையும் படிங்க: GSLV F-12 Rocket: இன்று விண்ணில் பாயும் ஜிஎஸ்எல்வி எப்12.. இதன் சிறப்பம்சங்கள் தெரியுமா?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios