GSLV F-12 Rocket: இன்று விண்ணில் பாயும் ஜிஎஸ்எல்வி எப்12.. இதன் சிறப்பம்சங்கள் தெரியுமா?

GSLV F-12 Rocket: ஜிஎஸ்எல்வி எப்12 ராக்கெட் இன்று (மே.29) காலை 10.42 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. 

 

Gslv F12 Will Be Launched  today From The Satish Dhawan Space Research Center

ஆந்திராவில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையம் (ISRO) ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருக்கும் 2ஆவது ஏவுதளத்தில் இருந்து இந்த 'ஜிஎஸ்எல்வி எப்12' (GSLV F12) என்ற ராக்கெட் ஏவப்படுகிறது. சரியாக இன்று (மே 29) காலையில் 10.42 மணிக்கு விண்ணில் செலுத்தப்படவுள்ளது. 

சிறப்பம்சங்கள்:

ஜிஎஸ்எல்வி எப்12 ராக்கெட் சுமார் 51.7 மீட்டர் உயரம் கொண்டது. மொத்தமாக 420 டன் உந்துவிசை எடை உடையது. ஜிஎஸ்எல்வி வரிசையில் தற்போது ஏவப்படவுள்ள ராக்கெட்15ஆவதாக செலுத்தப்படும் ராக்கெட் ஆகும். இதனுடன் 2 ஆயிரத்து 232 கிலோ எடையுள்ள 'என்விஎஸ்-01' எனும் வழிகாட்டி செயற்கைகோளும் பூமி சுற்றுப்பாதையில் 36 ஆயிரம் கி.மீ உயரத்தில் நிலைநிறுத்தப்படும். குறிப்பாக உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட அணு கடிகாரமும் இந்த செயற்கைக் கோளில் பொருத்தப்பட்டுள்ளது.  

செயற்கைகோளை அனுமானித்துள்ள சுற்றுப்பாதையில் கொண்டு சேர்க்க அடுத்தடுத்த சுற்றுப்பாதையை உயர்த்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இன்றைக்கு விண்ணில் செலுத்தப்படும் ஜிஎஸ்எல்வி எப்12, செயற்கைக்கோள் பிற செயற்கைக்கோள்களுடன் சேர்ந்து தரை வழி போக்குவரத்து, கடல் வழி போக்குவரத்து, வான்வெளி வழி போக்குவரத்தைக் கண்காணிக்கும் என சொல்லப்படுள்ளது. அதிலும் பேரிடா் காலங்களில் நமக்கு தெளிவான தகவல்களை இந்த செயற்கைக்கோள் கொடுக்கும் எனவும் இஸ்ரோ நம்பிக்கை தெரிவித்துள்ளது.

சும்மா நினைக்காதீங்க! சர்க்கரை நோய் மற்றும் புற்றுநோயை தடுக்க இந்த 'கருப்பு பீன்ஸ்' உங்களுக்கு உதவுமாம்...!

இந்த செயற்கைகோளின் இறுதி கட்டப்பணியான 27.30 மணி நேர 'கவுண்ட்டவுன்' நேற்று காலையில் 7.21 மணிக்கு தொடங்கியது. சுமார் 3 நிலைகளை கொண்ட இந்த ராக்கெட் ஏவுதளத்தில் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வழிகாட்டி ராக்கெட் மற்றும் செயற்கைகோளின் செயல்பாடுகள் தற்போது வரை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இன்னும் சில நிமிடங்களில் ஜிஎஸ்எல்வி எப்12 விண்ணில் பாயும். 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios