Asianet News TamilAsianet News Tamil

பொருளாதார அடிப்படையில் தரவரிசை: மத்திய அரசின் புதிய திட்டம்

நாட்டில் உள்ள 4,500 நகரங்கள் மற்றும் நகராட்சி அமைப்புகளை அவற்றின் பொருளாதாரச் செயல்பாடுகளின் அடிப்படையில் தரவரிசைப்படுத்த மத்திய அரசு திட்டம் வகுத்துள்ளது.

Govt to rank revenue-starved civic bodies on fiscal discipline
Author
First Published Dec 29, 2022, 11:22 AM IST

இந்திய நகரங்களின் பொருளாதார முன்னேற்றத்தில் ஆக்கபூர்வமான போட்டியை ஊக்குவிக்கும் நோக்கத்தில் மத்திய அரசு அவற்றை தரவரிசைப்படுத்தும் முயற்சியை முன்னெடுக்க உள்ளது. இதன்படி, நகரங்களின் நடப்பு நிதியாண்டின் நிதி நிலை, மூலவளங்களைத் திரட்டுதல், செலவினங்கள் போன்ற அம்சங்களைக் கருத்தில் கொண்டு தரவரிசை பட்டியல் தயார் செய்யப்பட உள்ளது.

மத்திய மாநில அரசுகளின் ஆதரவை எதிர்நோக்கி இருப்பது, மோசமான நிதி மேலாண்மை, தாமதமாக மேற்கொள்ளப்படும் நிதித் தணிக்கை போன்ற முக்கிய காரணிகள் பெரும்பாலான நகராட்சி அமைப்புகளின் பின்தங்கிய நிலையில் இருப்பதற்கு காரணங்களாக உள்ளன.

நகர்புற உள்ளாட்சி அமைப்புகளின் வலுவான நிதி நிலையை உறுதிசெய்வதன் மூலம் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார நிலை மேம்படும் என்று மத்திய அரசு கருதுகிறது. இதனால், நகர்புற நிதிநிலை தரவரிசை 2022 என்ற வழிகாட்டுநெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

மனைவின்னா இப்படி இருக்கணும்!: மனம் திறந்தது பேசிய ராகுல்

Govt to rank revenue-starved civic bodies on fiscal discipline

தர்மசாலாவில் அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுடன் நடத்திய கலந்துரையாடலின்போதே இந்தத் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி முன்வைத்தார் என்று நகர்புற விவகாரங்கள் துறையின் செயலாளர் மனோஜ் ஜோஷி கூறியுள்ளார்.

தற்போது நகராட்சி அமைப்புகள் சொந்தமாக ஈட்டும் வருவாய் நாட்டின் ஜிடிபியில் 0.15 சதவீதம் மட்டுமே. இது மற்ற வளர்ந்துவரும் நாடுகளில் 0.6 சதவீதமாக உள்ளது. முன்னேறிய நாடுகளில் இது 2.1 சதவீதம் அளவுக்கு உள்ளது. இதனால்தான் இந்தியாவில் நகர் அமைப்புகள் மத்திய மாநில அரசுகளை அதிகம் சார்ந்திருக்கும் நிலை இருக்கிறது.

மத்திய அரசின் தரவரிசைத் திட்டம் பற்றி கூறிய மத்திய வீட்டு வசதி மற்றும் நகர் விவகாரங்கள் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, நகரங்களிடையே சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற முனைப்பு ஏற்படுவது பெருமைக்குரியது என்றார்.

Covid 19: இந்தியாவில் 24மணிநேரத்தில் 188 பேருக்கு கொரோனா தொற்று: உயிரிழப்பு ஏதுமில்லை

Follow Us:
Download App:
  • android
  • ios