மனைவின்னா இப்படி இருக்கணும்!: மனம் திறந்தது பேசிய ராகுல்
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தன் வருங்கால மனைவி எப்படி இருக்க வேண்டும் என்று மனம் திறந்த பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் முன்னாள் தலைவருமான தலைவர் ராகுல் காந்தி ஒரு யூ டியூப் சேனலுக்கு சிறப்புப் பேட்டி அளித்துள்ளார்.
அந்தப் பேட்டியில், முன்னாள் பிரதமரும், தனது பாட்டியுமான இந்திரா காந்தியைப் பற்றிப் பேசினார். "என் வாழ்க்கையில் அதிம் நேசிக்கும் ஒருவர், எனக்கு இரண்டாம் தாய் அவர்தான்" என்று மகிழ்ச்சிப் பூரிப்புடன் கூறினார். உடனே, அவரைப் போன்ற ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொள்வீர்களா என்று கேட்கப்பட்டது.
இக்கேள்விக்கு பதில் சொன்ன ராகுல், "இது ஒரு சுவாரசியமான கேள்விதான். நான் ஒரு பெண்ணைத்தான் விரும்புவேன். அவருடைய குணநலங்கள் என்னென்ன என்றெல்லாம் கவலைப்பட மாட்டேன். ஆனால் அந்தப் பெண் என் அம்மா மற்றும் பாட்டியின் குணங்களைக் கொண்டவராக இருந்தால் நல்லதுதான்" என்று ராகுல் தெரிவித்தால்.
ராகுலை விமர்சிப்பவர்கள் அவருக்கு பப்பு என்று பெயர் வைத்து கேலி செய்வது பற்றி கேட்கப்பட்டது. இதற்கு பதில் சொன்ன ராகுல், "நான் அதைப் பற்றி எல்லாம் கவலைப்பட மாட்டேன். எப்படிச் சொல்லிக் கூப்பிட்டாலும் அதுபற்றி எனக்குக் கவலை இல்லை. அதனால் யாரையும் நான் வெறுக்கப்போவதில்லை. என்னை யாரும் தவறாக நடத்தலாம். ஏன், அடிக்கக்கூட செய்யலாம். இருந்தாலும் அவர்களை நான் வெறுக்க மாட்டேன்." என்று கூறினார்.
கடினமான நேரத்தில் என் அன்பும்,ஆதரவும் இருக்கும்: பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி ஆதரவு
மேலும் பேசிய ராகுல், தனக்கு இன்னும் பல பெயர்களை வைத்தால்கூட கவலை இல்லை என்றும் மாறாக மகிழ்ச்சிதான் அடைவேன் என்றும் சொன்னார்.
பைக், சைக்கிள் ஓட்டுவதைத் தான் விரும்புவதாகக் கூறிய அவர் சீனாவைச் சேர்ந்த ஒரு நிறுவனம் எலெக்ட்ரிக் சைக்கிள் தயாரிக்கிறது என்றும் அது ஒரு நல்ல ஐடியா என்றும் தெரிவித்தார்.
இந்தப் பேட்டியை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள ராகுல் காந்தி, தன்னிடம் கார் இல்லை, ஆனால் தன் அம்மாவின் CR-V காரை ஓட்டியிருப்பதாவும் குறிப்பிட்டுள்ளார்.
தாய் பாசத்தில் உருகும் ராகுல் காந்தி: நெகிழ வைக்கும் வைரல் வீடியோ!