தாய் பாசத்தில் உருகும் ராகுல் காந்தி: நெகிழ வைக்கும் வைரல் வீடியோ!
டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் 138வது ஆண்டு விழாவில் ராகுல் காந்தி தன் தாய் சோனியா காந்தியுடன் உரையாடி மகிழும் வீடியோ சமூக வலைத்தளங்களைக் கலக்கிக்கொண்டிருக்கிறது.
இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் 138வது ஆண்டு விழா இன்று தலைநகர் டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி உள்பட பல தலைவர்கள் கலந்துகொண்டனர்.
இந்த விழாவின்போது காங்கிரஸ் முன்னாள் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி தனது தாய் சோனியாவுடன் சிரித்துப் பேசி மகிழும் காட்சி இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
ராகுல் காந்தி பாதுகாப்பில் குறைபாடு, அத்துமீறல்!அமித் ஷாவுக்கு காங்கிரஸ் கடிதம்
சோனியா காந்திக்கும் அவர் மகன் ராகுல் காந்திக்கும் இடையேயான பாசமிகு தருணங்கள் இதற்கு முன்பும் பல நிகழ்ச்சிகளில் அரங்கேறியுள்ளன. ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணம் சில தினங்களுக்கு முன் டெல்லியை எட்டியது. இதனையொட்டி சனிக்கிழமை ராகுல் ட்விட்டரில் தாய் சோனியாவுடன் எடுத்துக்கொண்ட படம் ஒன்றைப் பகிர்ந்தார்.
இந்தப் படத்துடன், "நான் என் தாயிடம் பெற்ற அன்பைதான் நாடு முழுவதும் பகிர்ந்துகொள்கிறேன்" என்றும் கூறியிருந்தார்.
இருவரும் கட்டி அணைத்து கலந்துரையாடும் காட்சியும் புகைப்படங்களாக இணையத்தில் உலவிவருகிறது. கடந்த அக்டோபரில் சோனியா காந்திக்கு ராகுல் ஷூ அணிவிக்கும் போட்டோ ஒன்று வைரலானது.
கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கிய ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணம், தமிழ்நாடு, கேரளா, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா எனப் பல மாநிலங்களைக் கடந்து டிசம்பர் 24ஆம் தேதி டெல்லியை அடைந்தது. பல்வேறு தலைவர்களும் முக்கியப் பிரமுகர்களும் அவருடன் நடைபயணத்தில் இணைந்துகொண்டு ஆதரவைத் தெரிவித்தனர்.
கடினமான நேரத்தில் என் அன்பும்,ஆதரவும் இருக்கும்: பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி ஆதரவு