Covid 19: இந்தியாவில் 24மணிநேரத்தில் 188 பேருக்கு கொரோனா தொற்று: உயிரிழப்பு ஏதுமில்லை
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 188 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது, உயிரிழப்பு ஏதும் இல்லை என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 188 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது, உயிரிழப்பு ஏதும் இல்லை என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதன்படி, இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவருவோர் எண்ணிக்கை 3ஆயிரத்து 468 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழப்பு மொத்தம் 5 லட்சத்து 30ஆயிரத்து 696 ஆக உள்ளது.
கேரளாவில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா(PFI) நிர்வாகிகளின் 28 இடங்களில் என்ஐஏ ரெய்டு
சீனாவில் அதிகரித்துவரும் கொரோனா பரவலையடுத்து, அனைத்து மாநிலங்களிலும் சுகாதாரத்துறை அதிகாரிகள் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். பல்வேறு மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகளில் கொரோனா பரவலின்போது எவ்வாறு தயாராக இருப்பது குறித்து சோதனைபயிற்சியும் எடுக்கப்பட்டது.
வரும் 2023, ஜனவரி மாதத்தில் பிறப்குதியில் இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளது, ஆனால், மறுபடியும் புதிதாக ஓர் அலை இருக்காது என்று மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். அடுத்த 40 நாட்கள் மிகவும் முக்கியமானவை என்பதால், இந்த நாட்களில்மக்கள் கட்டுப்பாடுகளை முறையாகப் பின்பற்ற வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
வெளியே செல்லும்போது முகக்கவசம் அணிதல், கூட்டமான இடங்களுக்குச் செல்வதைத் தவிர்த்தல், சானிடைசர் பயன்படுத்துதல், தடுப்பூசி, பூஸ்டர் தடுப்பூசி செலுத்துக்கொள்ளுதல் மூலம் கொரோனா பரவல் வருவதைத் தடுக்கலாம் என்று மருத்துவர்கள் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா: ஜனவரியில் புதிய அலைக்கு வாய்ப்பு
கடந்த 24 மணிநேரத்தில் அதிபட்சமாக மகாரஷ்டிரா மாநிலத்தில் 36 பேர் கொரோனாவில் பாதிக்கப்பட்டனர், டெல்லியில் 13 பேரும், மும்பையில் 4 பேரும் பாதிக்கப்பட்டனர்.
நாடுமுழுவதும் 11 ஆயிரம் ஆக்சிஜன் பிளான்ட்கள் செயல்பட்டுவருகின்றன, 2.80 லட்ம் படுக்கைகள் தயாராக உள்ளன, 20ஆயிரம் சுகாதாரத்துறை அதிகாரிகள் நாடுமுழுவதும் தயாராக உள்ளதாக மத்திய அரசு தனது பயிற்சியின்போது தெரிவித்தது
சீனாவில் கொரோனா பரவல் அதிகரித்துவருவதால், மாநிலங்கள் கொரோனா காலத்தில் எவ்வாறு தயாராக இருக்க வேண்டும் என்பது குறித்து பயிற்சி எடுப்பது அவசியம் என்று மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. ஒட்டுமொத்தமாக இந்தியாவில் தற்போது 3,37,710 தனிமைப்படுத்தும் படுக்கைகள் தயாராக உள்ளன.
2,82,229 ஆக்சிஜன் கருவிகளும், அது தொடர்பாக 2,45,894 படுக்கைகளும் உள்ளன. இது தவிர 70,073 ஐசியு படுக்கைகளில் 64,711 படுக்கைகளும், 57,286ஐசியு மற்றும் வென்டிலேட்டர் சிகிச்சை படுக்கைகளில் 49,236 தயாராக தயாராக உள்ளன.