புதிதாக 20 ரூபாய் நாணயம் விரைவில் வெளியிடப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். 

இன்று மக்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2019-20-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். புதிய 10 ரூபாய் மற்றும் 20 ரூபாய் நாணயங்கள் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்று அறிவித்தார். 

மேலும் அவர் கூறுகையில், பார்வையற்றவர்களும் அடையாளம் காணும் வகையில் 1,2,5,10 ரூபாய் நாணயங்கள் வெளியிடப்படும்.    பொதுத்துறை நிறுவனங்களில் அரசின் பங்களிப்பு 51 சதவீதத்திற்கு மிகாமல் இருக்க நடவடிக்கை, பொதுத்துறை நிறுவனங்களில் அரசின் பங்கு விலக்கல் நடவடிக்கை தொடரும். இந்திய அரசின் வெளிநாட்டு கடன் விகிதம், ஜிடிபியின் அடிப்படையில் 5 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது என நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.