அரசு ஊழியர்களுக்கு தற்போது சம்பள உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.மாநில அரசின் இந்த உத்தரவு அரசு ஊழியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
டெல்லியில், அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்க கோரி பணியாளர்கள் அனைவருமே கடந்த 29 நாட்களாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் டெல்லி மாநிலத்தின் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமைக்கு கொண்டு செல்லப்பட்டது.
மற்ற மாநிலங்களை விட டெல்லியில் அங்கன்வாடி ஊழியர்களுக்கு குறைவான சம்பளம் வழங்கி வருவதாக மக்கள் குற்றச்சாட்டை முன் வைத்தனர். டெல்லியை விட தெலுங்கானா மாநிலத்தில் அங்கன்வாடி ஊழியர்களுக்கு அதிகமான சம்பளம் கொடுக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகம், தெலங்கானா, புதுச்சேரி மற்றும் கேரளா முதலான மாவட்டங்களை விட டெல்லியில் அனைத்து விலைவாசிகளும் உயர்ந்துள்ளதால் அங்கன்வாடி ஊழியர்கள் அவதிப்படுகின்றனர். இதனால் டெல்லி அங்கன்வாடி ஊழியர்களுக்கு கவுரவ ஊதியமாக 25,000 ரூபாய் மற்றும் உதவியாளர்களுக்கு 20,000 ரூபாய் சம்பளம் வழங்கவேண்டும் எனவும் ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆனால் டெல்லி அரசு அங்கன்வாடி ஊழியர்களுக்கு கவுரவ ஊதியமாக 12,720 ரூபாய் மற்றும் உதவியாளர்களுக்கு 6,810 ரூபாய் ஊதியம் வழங்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த ஊதியத்தையும் அங்கன்வாடி ஊழியர்கள் வாங்க மறுத்து வருகின்றனர். இதனால் மீண்டும் சம்பள உயர்வு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
