புதிய 20 ரூபாய் நாணயத்தை மக்கள் பயன்பாட்டிற்காக விரைவில் வெளியிட உள்ளதாக மத்திய அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது. 

இந்திய ரிசர்வ் வங்கி கடந்த 2019-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் 10 ரூபாய் நாணயத்தை வெளியட்டது. சரியாக பத்து வருடங்கள் ஆகிய நிலையில் ரூ.20 நாயணத்தை வெளியிடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த ரூ.20 நாணயம் மற்ற பழைய நாணயங்களை போல் அல்லாமல், பன்னிருகோணம் எனும் உருவில் புதிய வடிவமைப்பை பெறவுள்ளது.

இந்நாணயம் தொடர்பாக நிதித்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ‘27 மில்லி மீட்டர் சுற்றளவு கொண்ட இந்த புதிய ரூ.20 நாணயத்தில், மூன்று வகையான உலோகங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. ஏற்கனவே புழக்கத்தில் உள்ள ரூ.10 நாணயத்தில் ஓரங்களில் நுட்பமான வெட்டுகள் போன்ற அமைப்பு இருக்கும். ஆனால், இந்த ரூ.20 நாணயத்தில் அதுபோன்று ஏதும் இல்லாமல் உருவாக்கப்பட உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. 

அதேபோல நாணயத்தின் உள்வட்டம், 75 சதவிகிதம் செம்பு, 20 சதவிகிதம் துத்தநாகம் மற்றும் 5 சதவிகிதம் நிக்கல் ஆகியவற்றில் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, பார்வையற்றோர் எளிதாக அறிந்துகொள்ளும் வகையில், புதிய நாணயங்களை பிரதமர் மோடி மற்றும் நிதியமைச்சர் அருண் ஜெட்லி ஆகியோர் இன்று வெளியிட்டனர்.