முக்கியமான நபரை நீக்கிய கூகுள்.. பணியில் இருந்து நீக்கப்பட்டார் மாதவ் சின்னப்பா - மனமுருகி அவர் போட்ட பதிவு!
கூகுள் நிறுவனம் உலக அளவில் கடந்த ஜனவரி மாதம் அதிரடியாக தன்னிடம் வேலை பார்த்து சுமார் 12,000 பேரை வேலையில் இருந்து நீக்கியது.
இந்த தகவல் இந்தியா மட்டுமல்லாமல் பல நாடுகளில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது, இந்நிலையில் அந்த பரபரப்பு அடங்கும் முன்னரே தற்பொழுது தங்கள் நிறுவனத்தின் முக்கியமான ஊழியர் ஒருவரை நீக்கி உள்ளது கூகுள் நிறுவனம்.
இதுவரை அந்த நிறுவனத்தில் பணியாற்றி வந்த செய்தி பிரிவின் இயக்குனர் மாதவ் சின்னப்பா அவர்களை கூகுள் நிறுவனம் தற்பொழுது நீக்கி உள்ளது. இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த 13 ஆண்டுகளாக கூகிள் நிறுவனத்தில் பணியாற்றி விட்டு தற்பொழுது அங்கிருந்து நீக்கப்பட்டுள்ள சின்னப்பா தனது லிங்க்ட்இன் பக்கத்தில் ஒரு உருக்கமான செய்தியை பதிவிட்டுள்ளார்.
அதில் தான் இப்பொழுது கார்டன் விடுப்பில் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார், இது நாம் பொதுவாக அழைக்கும் நோட்டீஸ் பீரியட் போலத்தான் என்று தகவல்கள் தெரிவிக்கின்றது. கடந்த 2010ம் ஆண்டு கூகுளில் தனது பயணத்தை துவங்கிய மாதவ் சின்னப்பா அதற்கு முன்பாக பிரபல செய்தி நிறுவனமான பிபிசியில் பணியாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
PM-KISAN நிதி இதுவரை ரூ. 2.60 லட்சம் கோடி விநியோகம்; 14வது தவணையை துவக்கி வைத்து பிரதமர் மோடி உரை!!
கூகுள் நிறுவனம் தனக்கு சிறந்த பல அனுபவங்களை கொடுத்ததாகவும், அந்த நிறுவனத்தின் டிஜிட்டல் நியூஸ் இனிசியேடிவ் மற்றும் ஜர்னலிசம் எமர்ஜென்சி ரிலீஃப் பண்ட் போன்றவற்றை தன்னுடைய சாதனைகளாக கருதுவதாக அவர் கூறியுள்ளார்.
இந்தியாவில் உள்ள தனது தாயாருடன் சில காலங்களை கழித்த பிறகு, அடுத்த ஆண்டு புதிய வேளையில் சேர்வதற்கான ஆயத்த பணிகளை இந்த ஆண்டு இறுதியில் தான் மேற்கொள்ள உள்ளதாக அவர் கூறியுள்ளார். கூகுள் நிறுவனத்தில் பல பசுமையான நினைவுகள் தனக்கு உள்ளதாகவும், தன்னுடைய ஒவ்வொரு வெற்றிக்கும் அதன் அனைத்து ஊழியர்களும் துணை நின்றார்கள் என்று கூறி மனமுருகி அந்த பதிவில் எழுதியுள்ளார் மாதவ் சின்னப்பா.
"ஒரு டீ கப் நிரம்புவதற்கு முன் அது காலியாக இருக்க வேண்டும் என்ற ஜென் பழமொழியின் அடிப்படையில், எனது முழு கவனமும் தேவைப்படும் சில குடும்பப் பிரச்சனைகள் தற்போது எனக்கு உள்ளது. ஆகஸ்ட் மாத விடுமுறையை எடுத்துவிட்டு, செப்டம்பர் மாதம் இந்தியாவில் இருக்கும் என் அம்மாவைக் கவனித்துக்கொள்ள செல்கின்றேன். மேலும் 2024ல் இன்னும் பல விஷயங்களைச் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில், அக்டோபரில் அதற்கான பணிகள் குறித்து யோசிக்கத் தொடங்குவேன்", என்று கூறியுள்ளார் அவர்.
இங்க பேச மாட்டாரு; ஆனா அங்க பேசுவாரு: மோடியை விளாசிய கார்கே!