Asianet News TamilAsianet News Tamil

பண்டமாற்றுக்கு திரும்பிய கிராமங்கள் `மோடி சொன்ன நல்ல காலம் எங்கே வந்திருக்கு?

goods exchange
Author
First Published Jan 1, 2017, 8:56 PM IST


பண்டமாற்றுக்கு திரும்பிய கிராமங்கள்
`மோடி சொன்ன நல்ல காலம் எங்கே வந்திருக்கு?

ராஜஸ்தான் மாநிலத்தில் பண்டி கணேஷ்புரா, சதார்கஞ்ச், ஜாக்குவாடா ஆகிய 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில், ரூபாய் நோட்டு பற்றாக்குறையை சமாளிக்க, கிராம மக்கள் பண்டமாற்று முறையை மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வந்திருக்கிறார்கள். அப்பகுதியில் விளையும் கோதுமையை கொடுத்துவிட்டு காய்கறி, மெழுகுவர்த்தி, தீப்பெட்டி, உப்பு ஆகியவற்றை வாங்குகிறார்கள்.

ராஜஸ்தானில் ஒரு கிலோ கோதுமை 21 முதல் 24 ரூபாய் வரை விற்கப்படுகிறது. ஆனால் கிராம மக்கள் உப்புக்கு கூட கோதுமையை சம அளவில் அல்லது எடையில் கொடுக்க வேண்டி உள்ளது.

இதனால் தங்களுக்கு பெருத்த நஷ்டம் ஏற்படுகிறது என்பதை விவசாயிகள் உணர்ந்து இருக்கிறார்கள். ஆனால் வேறு வழி இல்லாத காரணத்தால பண்ட மாற்று முறையை பின்பற்றுகிறார்கள்.

4 வருடங்களுக்கு முன்பு ராஜஸ்தான் மாநிலத்தில் கடுமையான வறட்சி ஏற்பட்டது. அப்பொழுது கிராமத்து மக்கள் பணத்துக்கு வழி இல்லாமல் தங்களிடம் இருந்த கோதுமையை கொடுத்துவிட்டு அடிப்படை தேவை பொருள்களை பண்டமாற்றாக பெற்றுக் கொண்டார்கள். அதனால் இப்பொழுது பண்டமாற்று முறைக்கு எளிதாக மாறி விட்டனர்.

``நாடாளுமன்றத் தேர்தலின்போது, “அச்சே தின் (நல்ல காலம்)” வரும் என்று மோடி வாக்குறுதி அளித்தார். ஆனால் நல்ல காலம் (அச்சே தின்) வரவில்லை. பழைய காலம்தான் (புரானே தின்) வந்திருக்கிறது. அதனால்தான் நாங்கள் பண்டமாற்று செய்கிறோம்” என கிராமத்து மக்கள் கூறுகின்றனர்.

அந்த கிராமங்களில் எல்லாம் 1000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்தாலும் வங்கிகளோ ஏடிஎம்மோ இல்லை.

15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சிறிய நகரங்களில் ஏடிஎம் உள்ளது. ஆனால் அந்த ஏடிஎம்–-ல் பணம் போடப்பட்டுள்ளது என்ற செய்தி, இந்த கிராமத்துக்கு வந்து சேருவதற்குள் அந்த ஏடிஎம்-–ல் போடப்பட்ட பணம் காணாமல் போய்விடுகிறது.

கிராமத்து மக்கள் ஓடி ஓடி போனாலும் பணம் எடுக்க முடியாமல், பணம் இல்லாமல் ஏமாற்றத்துடன் திரும்ப நேரிடுகிறது. அதனால், பணப் பிரச்சினையைத் தீர்க்க பண்டமாற்று முறைக்கு மாறி விட்டார்கள்.

Follow Us:
Download App:
  • android
  • ios