- Home
- இந்தியா
- இந்தியா முழுவதும் 908 சிறப்பு ரயில்கள் இயக்கம்.. தமிழ்நாட்டில் எவ்வளவு? மாஸ் காட்டும் ரயில்வே!
இந்தியா முழுவதும் 908 சிறப்பு ரயில்கள் இயக்கம்.. தமிழ்நாட்டில் எவ்வளவு? மாஸ் காட்டும் ரயில்வே!
Southern Railway Summer Specials Trains: கோடைகாலத்தையொட்டி இந்தியன் ரயில்வே நாடு முழுவதும் 908 சிறப்பு ரயில்களை இயக்க உள்ளது. தமிழ்நாடுக்கு எத்தனை ரயில்கள்? என்பது குறித்து பார்க்கலாம்.

கோடைகால சிறப்பு ரயில்கள்
இந்தியாவில் கோடை விடுமுறைக் காலத்தில் பயணிகளின் பயணத்தை எளிதாகவும், வசதியாகவும் மாற்றுவதற்காக, நாடு முழுவதும் அதிக எண்ணிக்கையிலான சிறப்பு ரயில் சேவைகளுக்கு ரயில்வே நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்திய ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஏப்ரல் 15, 2026 முதல் ஜூலை 15, 2026 வரையிலான மூன்று மாத காலத்தில், பயணிகளின் கூட்ட நெரிசலைச் சமாளிக்க மொத்தம் 908 கோடைக்கால சிறப்பு ரயில்கள் மூலம் 18,262 பயணங்கள் (trips) இயக்கப்பட உள்ளன.
908 சிறப்பு ரயில்கள் இயக்கம்
இதில், 660 ரயில்கள் மூலம் 11,294 பயணங்களுக்கான அறிவிப்பு ஏற்கனவே வெளியிடப்பட்டுவிட்டது. இதனால், பயணிகள் முன்கூட்டியே தங்கள் பயணத்தைத் திட்டமிட்டு, டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துகொள்ள முடியும். விடுமுறை, பண்டிகைக் காலங்களில் ஏற்படும் கூட்ட நெரிசலைச் சமாளிக்க இந்திய ரயில்வே முன்கூட்டியே திட்டமிட்டு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இந்த கோடைக்கால சிறப்பு ரயில்கள், இந்திய ரயில்வேயின் அனைத்து முக்கிய மண்டலங்களிலும் இயக்கப்படுவதால், அனைத்துப் பகுதிகளுக்கும் சீரான இணைப்பு வசதி கிடைக்கும்:
கோடைகால சிறப்பு ரயில்களின் முழு லிஸ்ட்
* தெற்கு மத்திய ரயில்வே (South Central Railway): 124 ரயில்கள் (1,184 பயணங்கள்) அனுமதிக்கப்பட்டு, 76 ரயில்கள் (324 பயணங்கள்) அறிவிக்கப்பட்டுள்ளன.
* மேற்கு ரயில்வே (Western Railway): 106 ரயில்கள் (2,078 பயணங்கள்) அனுமதிக்கப்பட்டு, 92 ரயில்கள் (1,667 பயணங்கள்) அறிவிக்கப்பட்டுள்ளன.
* வடமேற்கு ரயில்வே (North Western Railway): 76 ரயில்கள் (2,245 பயணங்கள்) அனுமதிக்கப்பட்டு, 62 ரயில்கள் (1,878 பயணங்கள்) அறிவிக்கப்பட்டுள்ளன.
* வடக்கு ரயில்வே (Northern Railway): 76 ரயில்கள் (2,090 பயணங்கள்) அனுமதிக்கப்பட்டு, 56 ரயில்கள் (1,535 பயணங்கள்) அறிவிக்கப்பட்டுள்ளன.
* மத்திய ரயில்வே (Central Railway): 74 ரயில்கள் (3,082 பயணங்கள்) அனுமதிக்கப்பட்டு, 70 ரயில்கள் (2,238 பயணங்கள்) அறிவிக்கப்பட்டுள்ளன.
தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்கள்
* தெற்கு ரயில்வே (Southern Railway): 72 ரயில்கள் (558 பயணங்கள்) அனுமதிக்கப்பட்டு, 38 ரயில்கள் (133 பயணங்கள்) அறிவிக்கப்பட்டுள்ளன. நமது தமிழ்நாட்டை பொறுத்தவரை சென்னையில் இருந்து தென் மாவட்டங்கள் உள்பட பல்வேறு இடங்களுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
* கிழக்கு மத்திய ரயில்வே (East Central Railway): 64 ரயில்கள் (2,711 பயணங்கள்) அனுமதிக்கப்பட்டு, 38 ரயில்கள் (1,060 பயணங்கள்) அறிவிக்கப்பட்டுள்ளன.
* வடக்கு மத்திய ரயில்வே (North Central Railway): 54 ரயில்கள் (1,163 பயணங்கள்) அனுமதிக்கப்பட்டு, 46 ரயில்கள் (688 பயணங்கள்) அறிவிக்கப்பட்டுள்ளன.
* வடகிழக்கு ரயில்வே (North Eastern Railway): 52 ரயில்கள் (814 பயணங்கள்) அனுமதிக்கப்பட்டு, 34 ரயில்கள் (477 பயணங்கள்) அறிவிக்கப்பட்டுள்ளன.
* கிழக்கு கடற்கரை ரயில்வே (East Coast Railway): 28 ரயில்கள் (410 பயணங்கள்) அனுமதிக்கப்பட்டு, 18 ரயில்கள் (88 பயணங்கள்) அறிவிக்கப்பட்டுள்ளன.
* மேற்கு மத்திய ரயில்வே (West Central Railway): 28 ரயில்கள் (408 பயணங்கள்) அனுமதிக்கப்பட்டு, 18 ரயில்கள் (192 பயணங்கள்) அறிவிக்கப்பட்டுள்ளன. இதேபோல் பல்வேறு மண்டல ரயில்வேகளையும் சேர்த்து மொத்தம் 908 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
தெற்கு ரயில்வேயில் தமிழ்நாட்டுக்கு எத்தனை ரயில்கள்?
தமிழ்நாட்டைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் தெற்கு ரயில்வேக்கு 72 சிறப்பு ரயில்கள் (558 பயணங்கள்) ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் பெரும்பான்மையான ரயில்கள் சென்னையில் இருந்து மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, கோவை போன்ற தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் இயக்கப்படவுள்ளன. மேலும் சென்னை எழும்பூர் - திருநெல்வேலி, தாம்பரம் - நாகர்கோவில், சென்னை சென்ட்ரல் - கோயம்புத்தூர் போன்ற வழித்தடங்களில் அதிகப்படியான சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

