நித்தியானந்தா விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளதற்கு காரணம் அவர் குஜராத் மாநிலத்தை சேர்ந்த மிகப்பெரிய நபர் ஒருவரை பகைத்துக் கொண்டது தான் காரணம் என்கிறார்கள்.

எங்கெல்லாம் பாஜக ஆட்சியில் இருக்கிறதோ, அங்கெல்லாம் ஆசிரமங்கள் அமைப்பது நித்தியானந்தா வழக்கம். அந்த அளவிற்கு பாஜகவுடன் நெருக்கம் காட்டி வருபவர் நித்யானந்தா. அந்த வகையில்தான் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஆசிரம் அமைத்துள்ளார் நித்யானந்தா. ஆசிரம் என்றால் மற்ற சாமியார்களை போல மிக பிரமாண்டமாக அமைப்பது நித்தியின் வழக்கம் அல்ல.

கர்நாடக மாநிலம் பிடதியில் மட்டும் தான்சாமியாருக்கு பிரமாண்ட ஆசிரமம். மற்ற இடங்களில் எல்லாம் குடிசைத் தொழில் போல் சின்னச்சின்ன ஆசிரமங்களை அமைத்து அந்த மாநிலங்களில் டொனேசன் வசூலிப்பது தான் நித்தி ஸ்டைல். இதற்காக அகமதாபாத்தில் நித்தி அமைத்த ஆசிரமம் தான் தற்போது அவருக்கு பிரச்சனையாகியுள்ளது. நித்தியின் பெண் சீடர்கள் பலர் இருந்தாலும் இரண்டு பேர் மட்டுமே அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர்.

நடிகை ரஞ்சிதாவிற்கு பிறகு அந்தஇரண்டு பெண் சீடர்களால் தான் நித்தியானந்தா எப்போதும் சமூக வலைதளங்களில் பேசு பொருளாக திகழ்ந்து வருகிறார். மகள்கள் இப்படி பேசப்படுகிறார்களே என்கிற கடுப்பில் தனது மகள்களை திருப்பி அனுப்புமாறு அந்த இரண்டு பெண் சீடர்களின் தாயும் தந்தையும் ஆசிரமத்திற்கு சென்று பிரச்சனை செய்தனர். இதனால் தற்காலிக ஏற்பாடாக அந்த இரண்டு பெண் சீடர்களையும் அகமதாபாத் அனுப்பி வைத்துள்ளார் நித்தி.

இங்கு தான் பிரச்சனை ஆரம்பமானதாக சொல்கிறார்கள். சில விஷயங்களுக்காக அகமதாபாத் ஆசிரம நிர்வாகிகள் சிலர் லோக்கல் பெரும்புள்ளியை பார்க்கச் சென்றுள்ளனர். அவர்களுடன் அந்த இரண்டு பெண் சீடர்களும் செல்ல பெரும்புள்ளி ஏதோ கேட்க கூடாததை கேட்டுவிட்டதாக சொல்கிறார்கள். அந்த இரண்டு பேருமே நித்தியானந்தாவிற்கு மிகவும் பேவரைட் என்பதால் உடனடியாக அவர்களை அகமதாபாத்தில் இருந்து தன்னுடன் அழைத்து வந்துவிட்டார் நித்யானந்தா. இந்த சூழலில் தான் சிறுவர், சிறுமியர் கடத்தல், சித்ரவதை, பாலியல் பலாத்காரம் என தவறான காரணங்ககளுக்காக நித்யானந்தா பெயர் மீண்டும் அடிபட ஆரம்பித்தது.

பாஜகவுடன் நெருக்கமாக இருக்க கூடிய நித்தியானந்தாவையே ஓடவிடும் அளவிற்கு அந்த நபர் அங்கு பெரும்புள்ளி என்கிறார்கள். இதனிடையே நித்தியானந்தா வெளிநாடு தப்பிச் சென்றுவிட்டதாக குஜராத் போலீசார் தெரிவித்த நிலையில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அதனை மறுத்துள்ளது. இதன் மூலம் குஜராத் அரசு நித்தியானந்தாவை தேடினாலும் மத்திய அரசு அதனை விரும்பவில்லை என்று சொல்கிறார்கள். எனவே விரைவில் நித்தியானந்தா பிரச்சனை முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.