ஹைதராபாத் நோக்கி சென்று கொண்டிருந்த கோதாவரி எக்ஸ்பிரஸ் ரயில் திடீரெனத் தடம் புரண்டது. நல்வாய்ப்பாக இதில் உயிரிழப்பு ஏதும் இல்லை.
கோதாவரி எக்ஸ்பிரஸ் (வண்டி எண் 12727) விசாகப்பட்டினத்தில் இருந்து செகந்திராபாத் வரை இயக்கப்படுகிறது. இந்த ரயில் புதன்கிழமை காலை தெலுங்கானா மாநிலம் பிபிநகர் அருகே வந்தபோது, ரயிலில் இருந்த 6 பெட்டிகள் தடம் புரண்டன. கோதாவரி எக்ஸ்பிரஸ் ரயில் விசாகப்பட்டினத்தில் இருந்து வந்து கொண்டிருந்தபோது இந்த விபத்து நடந்திருக்கிறது. ரயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து நிலைமையை ஆய்வு செய்து வருகின்றனர்.
ரயில் தடம் புரண்டதால் இந்த வழித்தடத்தில் பல ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளன. புவனகிரி, பீபிநகர், காட்கேசர் நிலையங்களில் பல ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளன. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாரும் பலியானதாகத் தெரியவில்லை.
Aadi Mahotsav: 'ஆதி மஹோத்சவ்' பழங்குடியினர் திருவிழா - பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்
இதுகுறித்து தெற்கு மத்திய ரயில்வேயின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள தகவலில் S1 - S4, GS, SLR ஆகிய பெட்டிகள் மட்டும் தடம்புரண்டன என்றும் அவற்றை விட்டுவிட்டு ரயில் பத்திரமாக ஹைதராபாத் சென்றது. கழற்றப்பட்ட பெட்டிகளில் இருந்த பயணிகளுக்கு வேறு பெட்டிகளில் இடம் கொடுக்கப்பட்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
