சட்டசபை தேர்தலை முன்னிட்டு வரும் 14 ஆம் தேதி சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை விடப்படுவதாக கோவா அரசு அறிவித்துள்ளது. 

சட்டசபை தேர்தலை முன்னிட்டு வரும் 14 ஆம் தேதி சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை விடப்படுவதாக கோவா அரசு அறிவித்துள்ளது. கோவா, உத்தர பிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், உத்தரகண்ட் ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, 5 மாநில சட்டசபை தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அண்மையில் அறிவித்தது. அதன்படி, உத்தர பிரதேச மாநிலத்தில், ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்றும் முதற்கட்ட தேர்தல் பிப்ரவரி மாதம் 10 ஆம் தேதியும், கடைசி மற்றும் 7 வது கட்ட தேர்தல் மார்ச் மாதம் 7 ஆம் தேதியும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மணிப்பூர் மாநிலத்தில் பிப்ரவரி 27 ஆம் தேதி முதற்கட்ட தேர்தலும், மார்ச் 3 ஆம் தேதி 2 ம் கட்ட தேர்தலும் நடைபெறவுள்ளது. உத்தரகண்ட், பஞ்சாப், கோவா ஆகிய மாநிலங்களில் ஒரே கட்டமாக பிப்ரவரி 14 ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் மார்ச் 10 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. இந்த நிலையில் கோவா சட்டப்பேரவைக்கு வரும் 14 ஆம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பாஜக தேர்தல் அறிக்கை இன்று வெளியாகிறது. தேர்தல் அன்று கோவா மாநிலத்திற்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. உத்திரப்பிரதேசம், பஞ்சாப், உத்தராகண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய 5 சட்டப்பேரவைகளுக்கும் தேர்தல் நடைபெறவுள்ளது.

இதில் 40 தொகுதிகளை கொண்ட கோவா சட்டமன்றத்துக்கு வரும் 14 ஆம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக பாஜக, காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் கட்சிகள் மும்முரமாக பிரச்சாரம் செய்து வருகின்றன. கோவாவில் தேர்தல் விதிமுறைகள் அமலாக்கப்பட்டு பறக்கும் படையினர் அம்மாநிலம் எங்கும் கடுமையாக கண்காணிப்பு நடத்தி வருகின்றனர். கோவா மாநில சட்டப்பேரவை தேர்தலில் வாக்குகள் முழுமையாக பதிய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதனையொட்டி அன்றைய தினம் கோவா மாநிலத்தில் தனியார் மற்றும் அரசு ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை அளித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இதனிடையே கோவா மாநிலத்திற்கான பாஜக தேர்தல் அறிக்கையை ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி இன்று வெளியிடுகிறார்.