செல்லாத ரூ.500, ரூ.1000 நோட்டுகளை மாற்ற முடியாமல், அதிகாரிகள் அலைகழிப்பு செய்ததையடுத்து, டெல்லி ரிசர்வ் வங்கி முன், இளம்பெண் மேல் ஆடை இன்றி நேற்று போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

மார்ச் 31 காலக்கெடு

பழைய ரூபாய் நோட்டுகளை வங்கியில் டெபாசிட் செய்யும் காலக்கெடு  டிசம்பர் 30ந் தேதியோடு முடிந்தது. இதையடுத்து, ரிசர்வ் வங்கியின் முக்கிய கிளைகளில் கடந்த 2-ந் தேதியில் இருந்து, செல்லாத ரூபாய்களை மாற்ற மக்கள் அலைமோதி வருகின்றனர்.

அனுமதி

இந்நிலையில், டெல்லியில் உள்ள ரிசர்வ் வங்கி கிளையில் செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்ற நேற்று ஒரு பெண் கைக் குழந்தையுடன் வந்து இருந்தார். அவர் அழுது கொண்டே  பணத்தை மாற்ற உள்ளே அனுமதிக்குமாறு ரிசர்வ் வங்கி காவலர்களிடம் கோரினார். 

போராட்டம்

அதற்கு அவர்கள் அனுமதிக்கவில்லை. இதையடுத்து அந்த பெண் தனது குழந்தையுடன் ரிசர்வ் வங்கி அலுவலகம் முன் அமர்ந்து போராட்டம் செய்யத் தொடங்கினார். 

மேல் ஆடை அகற்றம்

 அங்கிருந்த காவலர்கள் அந்த பெண், அவரின் குழந்தையை அந்த இடத்தில் இருந்து வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்த முயன்றனர். அப்போது அந்த பெண் திடீரென தனது மேல் ஆடையை கழற்றி வீசி எறிந்து அரை நிர்வாணத்துடன் அமர்ந்து வாசல்முன் அமர்ந்து போராட்டம் ெசய்தார். இதைப் பார்த்த காவலர்கள் செய்வது அறியாது திகைத்தனர். 

போலீசார்

உனடியாக போலீசாருக்கு , ரிசர்வ் வங்கி அதிகாரிகள் தகவல் கொடுத்தனர். சிறிது நேரத்தில் அங்கு வந்த போலீசார், அந்த பெண்ணையும், அவரின் குழந்தையையும் போலீஸ்நிலையத்துக்கு அழைத்துச்சென்றனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

 

வாக்குதவறக்கூடாது

மேலும், ரிசர்வ் வங்கி முன் பணம் மாற்ற கூடியிருந்த முதியோர்கள், உள்ளிட்ட மக்கள், பிரதமர் மோடி நவம்பர் 8-ந்த தேதி வாக்குறுதி அளித்தபடி நடக்க வேண்டும். டிசம்பர் 30-ந் தேதிக்குள் செல்லாத ரூபாயை டெபாசிட் செய்ய முடியாதவர்கள், மார்ச் 31-க்குள் ரிசர்வ்வங்கியில் கொடுத்து மாற்றலாம் என கூறியிருந்தார் அதன்படி நடக்க வேண்டும் எனத் தெரிவித்தனர்.