கேரளாவை மீண்டும் சோதிக்கும் இயற்கை.. அலை ரூபத்தில் வரும் ஆபத்து - ஆய்வு மையம் எச்சரிக்கை!
Kerala : கேரளாவில், வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 93க்கும் அதிகமான மக்கள் இறந்துள்ளதாக வருத்தமளிக்கும் தகவல்கள் வெளியாகி வருகின்றது.
கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் உள்ள மேப்பாடி என்ற இடத்தின் அருகே, மலைப்பாங்கான இடங்கள் அதிகம் உள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் அந்த இடத்தில் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் 90க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். மேலும் 120க்கும் அதிகமான மக்கள் படுகாயம் அடைந்துள்ளனர். அதை சுற்றியுள்ள முடக்காய் கிராமத்தில் இருந்து சுமார் 150 பேர் மீட்கப்பட்டு மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.
இறந்தவர்களில் இதுவரை 37 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன என்று தேசிய மீட்பு படை தெரிவித்துள்ளது. மீட்புப் பணிகளுக்காக ராணுவம் மற்றும் நான்கு தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) குழுக்கள் அங்கு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தற்போது நடைபெற்று வரும் மீட்பு முயற்சிகளில் உதவுவதற்காக பல மாவட்டங்களில் இருந்து பல மீட்புக்குழுக்கள் அங்கு விரைந்து வருகின்றனர்.
Wayanad Landslide | வயநாடு நிலச்சரிவு கழுகுப் பார்வை காட்சிகள்! கொடூரத்தின் உச்சம்!
பாரத பிரதமர் நரேந்திர மோடி, இறந்தவர்களின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளதோடு, இந்த நெருக்கடியை சமாளிக்க தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என்று உறுதியளித்துள்ளார். இதற்கிடையில், கேரள சுகாதாரத் துறை ஒரு கட்டுப்பாட்டு அறையைத் திறந்து, நிலச்சரிவு மற்றும் பிற மழை தொடர்பான பேரழிவுகள் குறித்த தகவல்களுக்கான அவசர தொடர்பு எண்ணை வெளியிட்டுள்ளது.
அலை ரூபத்தில் வரும் ஆபத்து
இன்னும் இந்த பெரும் இயற்கை சீற்றத்தில் இருந்தே கேரளா மீண்டும் வராத நிலையில், தேசிய கடல்சார் ஆய்வு மையம் ஒரு திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளது. நாளை ஜூலை 31ம் தேதி இரவு 11.30 மணி வரை, கேரளா கடலோர பகுதிகளில், கடை அலைகள் 2.1 முதல் 2.8 மீட்டர் வரை எழும்பக்கூடும் என்று எச்சரித்துள்ளது. ஆகவே மக்கள் யாரும் கடலுக்கு அருகில் செல்ல வேண்டாம் என்று எச்சரித்துள்ளது ஆய்வு மையம்.
வயநாட்டுக்கு முன் இந்தியாவை புரட்டிப் போட்ட மிக மோசமான நிலச்சரிவு துயரங்கள்!